நாகமங்கலம் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், மயிலாடுதுறை
முகவரி
நாகமங்கலம் சுந்தரேஸ்வரர் சிவன் கோயில், நாகமங்கலம், குத்தாலம் வட்டம், மயிலாடுதுறை மாவட்டம் – 609 801
இறைவன்
இறைவன்: சுந்தரேஸ்வரர் இறைவி : மீனாட்சி
அறிமுகம்
மயிலாடுதுறை அருகில் உள்ள குத்தாலம் சென்று அங்கிருந்து மேலை திருமணஞ்சேரி செல்லும் வழியில் ஒரு கிமி முன்னதாக ஒரு சிறிய சாலை மேற்கு நோக்கி செல்கிறது அது உங்களை நாகமங்கலம் அழைத்து செல்லும். இங்கு பிரதான சாலையை ஒட்டி ஒரு சிறிய தெரு ஒன்றுள்ளது அதனை அடுத்து ஒரு தெரு உள்ளது சிவன் கோயில் பிரதான சாலையினை ஒட்டியே உள்ளது. கோயில் எதிரில் ஒரு குளம் உள்ளது. கோயில் கிழக்கு நோக்கியது, இறைவன் சுந்தரேஸ்வரர் அழகிய லிங்கமூர்த்தியாக அமர்ந்துள்ளார். இறைவி மீனாட்சி தெற்கு நோக்கிய சன்னதி கொண்டுள்ளார். பிரகாரத்தில் விநாயகர், முருகன், மகாலட்சுமிக்கு தனி சிற்றாலயங்கள் உள்ளன. கோட்டத்தில் தென்முகன் மட்டும் உள்ளார் வடக்கில் துர்க்கை மட்டும் சண்டேசர் சன்னதி சிறப்பானது, இந்த சன்னதிக்குள் சண்டேசர் இறைவனை நோக்கியும், அருகிலேயே சண்டேஸ்வரி அருகில் அமர்ந்துள்ளமை சிறப்பு. பல பெரிய கோயில்களில் கூடகாண இயலாத காட்சி. வடகிழக்கில் சதுர்முகி (பிராம்மியாக இருக்கலாம்) மீனாட்சி தட்சணாமூர்த்தி, பைரவர், நாகர் சனி, சூரியன் ஆகியோர் ஒரு நீண்ட மேடையில் உள்ளனர். 1938- 1946 – 1999 – 2011 ம் ஆண்டுகளில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. தற்போது கோயில் போதிய பராமரிப்பின்றியும், முறையான பூஜை இன்றியும் உள்ளது. மதில் சுவர்கள் இடிந்து விரிசல் கண்டுள்ளது. முந்நூறு ஆண்டுகள் நம் முன்னோர்கள் பாதுகாத்து வந்த பொக்கிஷத்தை சில வருட அலட்சியத்தால் வீணாக்கி வைத்திருக்கிறோம். சிவன் மேல் பற்றுகொண்டோர் கோயில் குடிகள் எனப்படும் குருக்கள், பரிசாரகர், மங்கள இசைகலைஞர்கள், ஓதுவார்கள், பூகட்டிகள், விளக்கிடுபவர்கள், மணியடிப்பவர், கோயில் நிலபுலன்களை காக்கும் மணியார் இவர்களை நாம் காக்க தவறியதால் இவர்கள் கிராமங்களில் இருந்து வெளியேறி பிற தொழில் செய்ய முற்பட்டுவிட்டனர். விளைவு பூஜைக்கு ஆளில்லை!! # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நாகமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
குத்தாலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி