தேவங்குடி கோதண்டராமசாமி கோயில், திருவாரூர்
முகவரி :
தேவங்குடி கோதண்டராமசாமிகோயில்,
தேவங்குடி,
திருவாரூர் மாவட்டம் – 613803.
இறைவன்:
கோதண்டராமசாமி
இறைவி:
சீதை
அறிமுகம்:
தேவங்குடி கோதண்டராமசாமி கோயில் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம், தேவங்குடி என்னும் ஊரில் அமைந்துள்ள இராமர் கோயிலாகும். இக்கோயிலில் அருள்மிதகு கோதண்டராமர், சீதாலெஷ்மி சன்னதிகள் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. இங்குள்ள இத்திருக்கோயில் பல்லவர் காலத்தில் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 500 ஆண்டுகளுக்கும் மேலாக பழமை வாய்ந்த இக்கோதண்ட ராமன் கோயிலானது வானிலை , சீதோஷண தட்ப வெப்பம் போன்ற காரணங்களால் தற்போது பெருமளவில் சிதைவடைந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக தினசரி பூஜைகள் செய்யப்படாமல் இருந்த நிலையில் சில வருடங்களாக ஒரு கால பூஜை மட்டும் நடந்து வருகிறது.கோயிலில் கடந்த 1942-ம் வருடம் கும்பாபிஷகம் நடந்துள்ளது. நீண்ட இடைவெளிகளுக்கு பின்னர் 28ம் தேதி கும்பாபிஷேக ஏற்பாடு சிறப்பாக நடந்து முடிந்தது.
புராண முக்கியத்துவம் :
முற்காலத்தில் தேவர்கள் இந்த கிராமத்தில் வசித்து வந்ததால் இவ்வூர் தேவன்குடி என்னும் பெயரை பெற்றதாகவும். இங்கு இருக்கும் சிவனை இந்திரன் இந்திரலோகத்தில் இருந்து வந்து பூஜித்ததால் இங்கு அருள் பாலிக்கும் சிவன், இந்திரபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார் என்றும் தல புராணம் கூறுகின்றது. ஸ்ரீ காஞ்சி பரமாச்சார்யாள் இங்கு தங்கி இந்த இந்திரபுரீஸ்வரரை வழிபாட்டு பூஜித்திருக்கிறார். அதேபோல் முற்காலத்தில் இந்த ராமர் கோயிலில் கண் தெரியாத ஒருவர் ப்ரதக்ஷிணம் செயது வந்தார். ஒருநாள் இவ்வாறு வலம் வருகையில் திடீரென்று கண் பார்வை திரும்ப பெற்றதால் தன்னுடைய நிலங்களை இந்த கோயிலுக்கு நன்றியுடன் கொடுத்துவிட்டதாக கூறுவதுண்டு. அதனால் இந்த ராமருக்கு “கண் கொடுத்த கோதண்டராமர்” என்கிற பெயரும் உண்டாயிற்று. இந்த தேவன்குடியில் காசி தாத்தா என்பவரால் கடந்த 1909-ல் துவக்கப்பட்டு, 1916-ம் கும்பாபிஷேகம் செய்யப்பட்ட பஜனை மண்டலி உள்ளது. இங்கு ஏகாதசி மற்றும் பெருமாள் விசேஷ தினங்களில் இன்று வரை தவறாமல் சம்பரதாய பஜனைகள் இக்கிராமதினரால் நடத்தப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.
காலம்
500-1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தேவங்குடி
அருகிலுள்ள இரயில் நிலையம்
நீடாமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி