தென்மருதூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
தென்மருதூர் அகத்தீஸ்வரர் சிவன்கோயில்,
தென்மருதூர், திருக்குவளை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 610207.
இறைவன்:
அகத்தீஸ்வரர்
இறைவி:
வள்ளி நாயகி
அறிமுகம்:
இக்கோயில் திருக்குவளை அருகில் அமைந்துள்ளது. திருத்துறைபூண்டி சாலையில் சென்று மாவூர் பாலத்தின் முன்னர் இடதுபுறம் திரும்பும் கண்ணாப்பூர் (கன்றாப்பூர்) சாலையில் 4கிமீ சென்றால் தென் மருதூர் அடையலாம். கிழக்கு நோக்கிய சிவன்கோயில்,எதிரில் பெரிய குளத்துடன் உள்ளது.
இறைவன்- அகத்தீஸ்வரர் இறைவி- வள்ளி நாயகி.
உலகம் சம நிலையைப் பெறுவதற்காக அகத்தியர் தென் திசை நோக்கி சென்றபோது இங்கு தங்கி சிவபெருமானுக்கு பூஜை செய்துள்ளார். இதனால் இங்குள்ள இறைவன் அகத்தியரால் வழிபட்ட பெருமையை உடையது. . கோயில் கிழக்கு நோக்கிய நிலையில் அமைந்துள்ளது. இறைவனும், இறைவியும் தனித்தனியான சன்னதிகளில் உள்ளனர். விநாயகர், வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன் கருவறை வாயிலில் உள்ளனர்.
வடக்கில் சண்டிகேசுவரர் உள்ளார். தெற்குத் திசையை நோக்கிய நிலையில் தட்சிணாமூர்த்தியும், வடக்கு நோக்கிய நிலையில் பிரம்மாவும் உள்ளனர். இக்கோயிலில் பெரிய மகாமண்டபம் காணப்படுகிறது.அதிகார நந்தியையும், பலிபீடத்தையும் இங்குள்ளதை காணலாம். 1956, 1996 ஆகிய வருடங்களில் இக்கோயிலில் குடமுழுக்குகள் நடைபெற்றுள்ளன. பிரதோஷம் மற்றும் அன்னாபிஷேகம், சிவராத்திரி போன்ற விழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. மற்றபடி ஒருகால பூஜையில் உள்ளது கோயில்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தென்மருதூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி