திருவிசநல்லூர் அக்ரஹார தெரு சிவன்கோயில், தஞ்சாவூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/316236223_8366111643461872_4521658509479022378_n.jpg)
முகவரி :
திருவிசநல்லூர் அக்ரஹார தெரு சிவன்கோயில்,
திருவிசநல்லூர், கும்பகோணம் வட்டம்,
தஞ்சை மாவட்டம் – 612105.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாக்ஷி
அறிமுகம்:
கும்பகோணம் பாலக்கரையில் இருந்து கிழக்கே செல்லும் வேப்பத்தூர் சாலையில் சென்றால் 7 கிமீ தூரத்தில் கோயிலை அடையலாம். திருவிசலூர் என்ற பெயரில் தஞ்சாவூர் மாவட்டத்தில் பல ஊர்கள் காணப்படுவதால் இவ்வூரை பண்டாரவாடை திருவிசநல்லூர் என்றும் அழைக்கின்றனர். இந்த சிவன் கோயில் திருவிசநல்லூர் ஸ்ரீதர அய்யாவாள் மடம் இருக்கும் தெருவின் கிழக்கு கோடியில் உள்ளது. இறைவன்- விஸ்வநாதர் இறைவி – விசாலாக்ஷி கிழக்கு நோக்கிய சிவன் கோயில் இறைவன் கிழக்கும், இறைவி தெற்கு நோக்கியும் உள்ளனர். கிழக்கில் வழியில்லை தெற்கில் அம்பிகை சன்னதியின் எதிரில் அழகிய நடவாண மண்டபம் அதன் வழி கோயிலுள் நுழையலாம்.
தென் வாயிலின் இருபுறமும் லட்சுமி சரஸ்வதி சுதைகள் உள்ளன. இறைவன் இறைவி கருவறை அதிட்டானம் வரை கருங்கல்லாலும் அதற்க்கு மேல் செங்கல் கொண்டும் கட்டப்பட்டுள்ளது, விமானம் துவி தள விமானமாக உள்ளது. அர்த்தமண்டபம் முகப்பு மண்டபம் என இரு மண்டபங்கள் உள்ளன. இறைவன் எதிரில் சிறிதாக ஒரு நந்தியும் முக மண்டப வெளியில் ஒரு நந்தியும் உள்ளன. கருவறை கோட்டத்தில் தென்முகன் துர்க்கை மட்டும் உள்ளனர். பிரகாரத்தில் நீண்ட திருமாளிகை பத்தி உள்ளது, முதலில் விநாயகர் அடுத்து வாகனமண்டபம், அடுத்து முருகனுக்கு சன்னதி இதில் வள்ளி தெய்வானை சமேத முருகன் உள்ளார். வடமேற்கில் மகாலட்சுமிக்கு சன்னதி. வடகிழக்கில் ஒரு கிணறும் சற்றே முக மண்டபத்தினை ஒட்டி நவக்கிரக மண்டபம் உள்ளது சனி பகவானுக்கு ஒரு சன்னதியும் ஈசான மூலையில் உள்ளது.
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/316236223_8366111643461872_4521658509479022378_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/317080714_8366112626795107_3630693075445507858_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/317373015_8366111663461870_6781238085068417367_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/317636690_8366111326795237_5880863027161612249_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/317691160_8366112186795151_4658568908317572752_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/317718819_8366111953461841_8372134211828601147_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/317729189_8366111140128589_8773473162870856650_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/317807653_8366112453461791_483588035203261399_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/317945513_8366110670128636_1486151582381274222_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/317984321_8366110403461996_4962581794740996919_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/318086458_8366111243461912_4854740430900312819_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/12/318243986_8366110360128667_5994601968739544204_n-1024x771.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருவிசநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கும்பகோணம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி