Wednesday Dec 25, 2024

திருவதிகை அதிகை வீரட்டானேசுவரர் திருக்கோயில், கடலூர்

முகவரி

அருள்மிகு வீரட்டானேசுவரர் திருக்கோயில், திருவதிகை-607 106, பண்ருட்டி போஸ்ட, கடலூர் மாவட்டம். போன்: +91-98419 62089

இறைவன்

இறைவன்: வீரட்டானம், வீரட்டேஸ்வரர் இறைவி: திரிபுரா சுந்தரி

அறிமுகம்

திருவதிகை வீரட்டானேசுவரர் கோயில் தமிழ்நாட்டின் கடலூர் மாவட்டத்தில் உள்ள பழமையான சிவன் கோவில் ஆகும். அப்பர், சம்பந்தர், சுந்தரர் மூவராலும் பாடல் பெற்ற தலமாகும். இது தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் நடுநாட்டு தலங்களில் ஒன்றாகும். இது பண்ருட்டியில் இருந்து 2 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. இந்தக் கோவில் தமிழ்நாட்டில் உள்ள எட்டு வீர சைவக் கோவில்களுள் ஒன்று. இது தென் ஆற்காடு மாவட்டத்தில் அமைந்துள்ளது. இறைவன் சம்பந்தருக்குத் திருநடனம் காட்டியதும், அப்பரின் சூலைநோய் நீங்கப் பெற்றதும், திலகவதியார் தொண்டாற்றியதும், மனவாசகங் கடந்தார் அவதரித்ததும், திரிபுரத்தை எரித்ததும் நடந்த தலம் இதுவென்பது தொன்மநம்பிக்கை (ஐதிகம்).

புராண முக்கியத்துவம்

தாருகாட்சன், கமலாட்சன், வித்யுன்மாலி என்னும் மூன்று அசுரர்கள் கடுமையான தவங்கள் செய்து பிரம்மாவிடம் வரம் பெற்று தங்களை யாராலம் வெல்லவோ கொல்லவோ முடியாது வரம் பெற்றனர்.அவர்களால் தொல்லையடைந்தவர்கள் ஈசனிடம் முறையிட்டனர். அதன்படி பூமியை தேராகவும், சூரிய சந்திரர்களை தேர் சக்கரங்களாகவும், நான்கு வேதங்களை குதிரைகளாகவும், பிரம்மாவை தேரோட்டியாகவும் மற்ற தேவர்களை எல்லாம் தேருடன் (அதற்கு வைதிகத் தேர்) வரச் செய்தார். சுவாமி மேருமலையை வில்லாகவும் வாசுகி என்னும் பாம்பை நாணாகவும் திருமாலை அம்பாகவும் அம்பின் நுனியில் அக்னியையும் வைத்து அந்த வில்லுடன் தேரில் ஏறினார். அச்சு முறிந்தது. பிள்ளையாரை வணங்காததால் தான் இப்படி என்று உணர்ந்து கணபதி பூஜை செய்து அவரது அருளை பெற்று தொடர்ந்தனர்.தேரில் வந்த அனைத்து தேவர்களும் தங்களால் தான் அந்த அசுரர்கள் மடியப்போகிறார்கள் என்று நினைத்து கொண்டிருக்க சிவபெருமான் அசுரர்கள் மீது வில் அம்பு எதையும் பயன்படுத்தவில்லை. அசுரர்களை பார்த்து சற்றே சிரித்தார்.அவ்வளவுதான். உலகமே நடுங்கும்படியாக தீப்பிழம்பு ஏற்பட்டு அவர்கள் மூவரும் சாம்பலாயினர். தங்கள் உதவி இல்லாமலே சிவன் சம்காரம் செய்ததை உணர்ந்து தேவர்கள் வெட்கி தலைகுனிந்தனர். ஒரே சமயத்தில் தேவர்கள் அசுரர்கள இருவரது ஆணவத்தையும் அடக்கினார் ஈசன். பின்பு மூன்று அசுரர்களையும் மன்னித்து இருவரை தனது வாயில் காப்பாளர்களாகவும், ஒருவரை குடமுழா முழக்குபவனாகவும் ஆக்கி கொண்டார்.மேற்கூறிய புராண வரலாறே திரிபுர சம்காரம் என்று அழைக்கப்படுகிறது.

நம்பிக்கைகள்

இங்குள்ள ஈசனை வழிபடுவோர்க்கு மனநிம்மதி கிடைக்கும்.இது உடல் சம்பந்தப்பட்ட எந்த நோயானாலும் தீருகிறது.வயிற்று வலி (அல்சர்) சத்ரு உபாதைகள் சூலைத் தீர்த்தமும் உட்கொண்டால் உடனடியாக தீர்ந்து விடும்.எதிரிகள் தொல்லை நீங்குதல், வர்க்க சாப தோச நிவர்த்தி, முன்னோர் செய்த பாவங்கள் இங்கு வழிபட்டால் நீங்கும். குழந்தை இல்லாதவர்கள் இறைவனை வழிபட்டு அபிசேகம் செய்து அந்தப்பாலை உட்கொண்டால் உடனே குழந்தை பேறு உண்டாகும். மேலும் வேலைவாய்ப்பு, குடும்ப ஐஸ்வர்யம் ஆகியவற்றுக்காகவும் இத்தலத்தில் பக்தர்கள் பிரார்த்தனை செய்து கொள்வது வழக்கமாக உள்ளது.

சிறப்பு அம்சங்கள்

வழிபட்டவர்கள் : இந்திரன், பிரம்மன், திருமால், பாண்டவர்கள், சப்தரிஷிகள், வாயு, வருணன், யமன் முதலானோர். இறைவன் தேரில் வந்ததால் இத்திருக்கோயிலின் அமைப்பும் தேர் வடிவில் உள்ளது. இத்திருக்கோயிலின் கர்ப்ப கிரக விமானத்தை பார்த்து இராஜ இராஜ சோழன் பிற்காலத்தில் தஞ்சையில் பெரிய கோயிலை கட்டினான். திவதிகை கோயிலின் நிழல் தரையில் விழாதபடி கணித சாஸ்திர முறையுடன் பல்லவர்களால் கட்டப்பட்டுள்ளது. எந்த ஆயுதமின்றி ஒரு அழகான சிரிப்பினாலேயே ஒரே நொடியில் நடைபெற்ற சிவபெருமானின் திரிபுரசம்காரம் நடைபெற்ற தலம். முப்புரம் எரிசெய்த பெம்மான் மூவருக்கு அருள் செய்தார். ஐந்தெழுத்தால் இறைவன் மும்மலங்களையும் சிதைத்தது இத்தலத்திலே. தேவாரம் முதன் முதலில் பாடப்பட்ட தலம் இதுவே ஆகும். முதன்முதலில் தேர் ஏற்பட்ட வரலாறு இதுவே ஆகும்.இன்றைக்கு கோயில்களில் தேர் இருக்க வேண்டிய ஐதீகம் உருவானதே இத்தலத்தில்தான். அட்ட வீரட்டானத் தலங்களில் சிறப்புடையது. அட்ட வீரட்டானத் தலங்களில் அதிக பாடல் பெற்ற தலம் இதுவே. அட்ட வீரட்டானத் தலங்களில் மூவர் தமிழும் பெற்ற சிறப்பு தலம் இது. சிதறு தேங்காய் (சூறைத் தேங்காய்) என்ற பழக்கம் உருவானதும் இத்தலத்தில்தான். மூலவருக்கு பின்புறம் சுதையால் ஆன சுவாமி அம்பாள் திருமணக்கோலம் உள்ளது. திருநாவுக்கரசருக்கு திருமணக்கோலத்தில் காட்சி தந்த தலம் என்பதால் திருமணங்கள் நிறைய நடைபெறுகின்றன. கருவறை கோபுரம் நிரம்ப சுதைகளால் ஆனது.கருவறை விமான அமைப்பு, மண்டப அமைப்பு ரதம் போன்ற அமைப்பை கொண்டது. சித்திரையில் அப்பர் பெருமானுக்கு பத்து நாட்கள் சிறப்பாக விழா நடைபெறுகிறது. வைகாசியில் பிரம்ம உற்சவம் பத்து நாட்கள் விசாகத்தில் தேர் திருவிழாவும் திரிபுர சம்காரமும் நடைபெறுகிறது. உழவாரம் முதன்முதலில் திருநாவுக்கரசரால் இங்குதான் செய்யப்பெற்றது. பன்னிரெண்டு திருமுறைகளிலும் திரிபுரசம்கார நிகழ்ச்சியை பற்றியே அதிகமாக பாடப்பட்டுள்ளது இந்த இறைவனை வழிபடுவோர்க்கு ஆணவம், கன்மம், மாயை ஆகிய மும்மலங்களும் நீங்கும். அம்பாள் சன்னதி சுவாமிக்கு வலப்புறம் உள்ளது தனிச்சிறப்பு. இதனால் திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து பிரார்த்தனை செய்தால் திருமணம் உடனடியாக தீர்ந்து விடும். ஆணவமாய் வந்தவர்கள் இங்கு திரும்பவும் வரமாட்டார்கள். அந்த அளவுக்கு சக்தி வாய்ந்த தலம். இத்தலத்தில் குனிந்துதான் விபூதி பூச வேண்டும்.

திருவிழாக்கள்

பங்குனி சித்திரை மாதங்கள் 10 நாட்கள் திருவிழா வசந்தோற்சவம் ஸ்தல நாயகர் வசந்த மண்டபத்தில் எழுந்தருளல் சித்திரை சதயம் 10 நாட்கள் அப்பர் மோட்சம் திருக்கயிலாய காட்சி, வைகாசி பெருவிழா பிரம்மோற்சவம் 10 நாட்கள் பஞ்ச மூர்த்தி வீதியுலா வெள்ளி வாகன புறப்பாடு ஸ்தல நாயகர் திருத்தேரில் வீதியுலா ஆடிப்பூர உற்சவம் 10நாட்கள் மாணிக்கவாசக உற்சவம் மார்கழி 10நாட்கள் மார்கழி திருவதிகை நடராஜர் தீர்த்தவாரி, ஆருத்ரா தரிசனம் 1 நாள் திருவிழா மாசி மகா சிவராத்திரி 6 கால பூஜை கார்த்திகை 5 சோமவாரம் பங்குனி உத்திரம் திலகவதியார் குருபூஜை திருக்கல்யாண உத்திரம் சுவாமி அம்பாள் 1 நாள் உற்சவம் பிரதோச தினத்தின் போது கோயிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருக்கும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

பண்ரூட்டி

அருகிலுள்ள இரயில் நிலையம்

பண்ரூட்டி

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top