Wednesday Dec 25, 2024

திருநள்ளாறு கொம்யூன் கீழசுப்புராயபுரம் சிவன்கோயில், காரைக்கால்

முகவரி

திருநள்ளாறு கொம்யூன் கீழசுப்புராயபுரம் சிவன்கோயில், திருநள்ளாறு, காரைக்கால் மாவட்டம் – 609607.

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

திருநள்ளாற்றில் இருந்து வடக்கு நோக்கி செல்லும் நெடுங்காடு சாலையில் சூரக்குடி சென்று அங்கிருந்து கிழக்கில் ஒரு கிமீ. தூரத்தில் கீழசுப்புராயபுரம் அடையலாம். இங்கு பழமையான சிதைவடைந்த சிவாலயம் இருந்தது. அதில் பல லிங்கங்கள் இருந்தன. பல காலம் வெளியில் இருத்தப்பட்டிருந்த பிரம்மாண்ட லிங்க மூர்த்திக்கு கருவறை கட்டப்பட்டு அதன் எதிரில் ஒரு நந்தியும் வைக்கப்பட்டுள்ளது. வாயிலில் விநாயகர் முருகன் உள்ளனர். தென்முகன் துர்க்கையும் உள்ளனர். லிங்க மூர்த்தி பார்க்க பிரம்மாண்டமானதாக காட்சியளிக்கிறார். அதனால் இவரின் பழம் கருவறை எப்படி இருந்திருக்கும், கோயில் எவ்வளவு பெரிதாக இருந்திருக்கும் என வியப்பதை தவிர்க்க இயலாது. இவை தவிர இக்கோயிலின் வடபுறத்தில் நீண்ட தகர கொட்டகையில் மற்றொரு பெரிய லிங்கமும் அதன் அம்பிகையும் பைரவரும் உள்ளனர். உடன் விநாயகர் வள்ளி தெய்வானை சகித முருகன் உள்ளார். நவகிரகங்களும் உள்ளன. இந்த கோயிலின் எதிரில் பெரிய ஆலமரம் ஒன்று உள்ளது, இம்மரம் பேசுமானால் பழமையான பல தகவல்கள் கிடைக்கக்கூடும்.

புராண முக்கியத்துவம்

புதுச்சேரி விடுதலைக்காக நாடகம் மூலம் குரல் கொடுத்தவர் நாடக கலைஞர் சுப்புராயன். காரைக்கால் மாவட்டத்தின் மூத்த நாடக கலைஞரான சுப்புராயன் பிரெஞ்சுக்காரர்கள் வசமிருந்து புதுச்சேரி சுதந்திரம் பெறுவதற்கு தனது நாடகங்கள் மூலம் முதன் முதலில் குரல் கொடுத்தார். சாணக்கியன் என்ற நாடகத்தில் ஆவேச வசனம் பேசி நடித்ததால், சாணக்கியன் சுப்பராயன் என்று அழைக்கப்பட்டார். இதனால் திருநள்ளாற்றின் வடகிழக்கு பகுதி கிராமம் ஒன்று இவரது பெயரில் அழைக்கப்படுகிறது. # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.

காலம்

500 – 1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருநள்ளாறு

அருகிலுள்ள இரயில் நிலையம்

காரைக்கால்

அருகிலுள்ள விமான நிலையம்

பாண்டிச்சேரி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top