Sunday Nov 24, 2024

திருச்சிற்றம்பலம் நடனபுரீஸ்வரர் சிவன்கோயில், மயிலாடுதுறை

முகவரி :

திருச்சிற்றம்பலம் நடனபுரீஸ்வரர் சிவன்கோயில்,

திருச்சிற்றம்பலம், மயிலாடுதுறை வட்டம்,

மயிலாடுதுறை மாவட்டம் – 609204.

இறைவன்:

நடனபுரீஸ்வரர்

இறைவி:

சிவகாமசுந்தரி

அறிமுகம்:

மணல்மேடு-பந்தநல்லூர் சாலையில் திருசிற்றம்பலம் நிறுத்தத்தில் இறங்கி வடக்கு நோக்கிய சாலையில் ஒருகிமீ செல்லவேண்டும். இறைவன் – நடனபுரீஸ்வரர், இறைவி சிவகாமசுந்தரி.

இந்த ஊருக்கு திருச்சிற்றம்பலம், சந்திரகேசம், சந்திரஜோதிபுரம். பராசரேசம். என்ற பெயர்கள் உண்டு. இறைவனுக்கு ஸ்ரீநடனபுரீஸ்வர், ஸ்ரீவில்வவனேஸ்வரர், ஸ்ரீசந்திரேஸ்வரர், ஸ்ரீபராசரேஸ்வரர் பெயர்கள் உள்ளன. இறைவி சௌந்தரநாயகி, பெருமாள் ஸ்ரீதேவி, சன்னதிகளும், விநாயகர், முருகன், துர்க்கை, தெட்சிணாமூர்த்தி, நவகிரகம், நால்வர், நடராஜர் உபசன்னதிகளும் உள்ளன.ஆனால் நடராஜர் பாதுகாப்பின்றி உள்ளதால் கருலத்தில் வைக்கப்பட்டுள்ளது.

1978ல் கருங்கல் திருப்பணி செய்யப்பட்டு கும்பாபிஷேகம்.செய்யப்பட்டது. வில்வக்காடாக இருந்த இந்த இடத்தில் இறைவன் வில்வ மரத்தடியில் காட்சி அளித்தால் வில்வாரண்யேஸ்வரர்.எனப்படுகிறார். கிழக்கு நோக்கிய கோயில் இறைவி தெற்கு நோக்கியுள்ளார், தீர்த்தம் கோயில் எதிரில் சன்னதி தெருவின் கடைசியில் சந்திர புஷ்கரணி, 23.2.2023 வியாழக்கிழமை அன்று பாலாலயம் காணவுள்ளது.

புராண முக்கியத்துவம் :

 சயரோகத்தால் பீடிக்கப்பட்ட சந்திரன் தான் கொண்டு வந்த லிங்கத்தை இங்கு வைத்து விட்டு வளர்தொட்டி பிரம்மபுரீஸ்வரரை வழிபடச் சென்று திரும்பி வந்து லிங்கத்தை எடுக்க முயல முடியவில்லை. சிவன் விரும்பி இருந்த தலம். சந்திரன் பராசரமகரிஷி மச்சகந்தியை மோகித்து சித்தபிரமை அடைந்து இங்கு வழிபாடு செய்து குணம் பெற்றதால் பாராசரேஸ்வரர் கௌசிக வம்ச ஞானசிந்து மகரிஷி தினசரி நியமப்படி தனுஷ்கோடியில் குளித்து காசி விஸ்வநாதரை தரிசித்து பின் தில்லை தரிசனம் செய்பவர். அன்று சோதனைபோல் பெரும் மழை. அவரால் வான் வீதியில் செல்ல முடியவில்லை. தில்லை செல்லும் வழியில் இரவு இங்கு தங்கி நியமப்படி செயல்பட முடியாததனால் காலை தீமூட்டி உட்புகந்து உயிரை மாய்க்க முயன்றபோது நடராசர் ஆட்கொண்டார் அதனால் நடனபுரீசுவரர்.எனப்படுகிறார்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

திருச்சிற்றம்பலம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

மயிலாடுதுறை

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top