திருக்கண்ணபுரம் குடுமிநாதர் சிகாநாதர் சிவன் ஆலயம்
முகவரி
குருமானங் கோட்டூர் சிகாநாதர் சிவன் ஆலயம், திருக்கண்ணபுரம், ஆண்டிபந்தல், நாகப்பட்டினம் – 609 704.
இறைவன்
இறைவன் : சிகாநாதர் (குடுமிநாதர்) இறைவி: கோலாம்பிகை
அறிமுகம்
குருமானங் கோட்டூர்: திருக்கண்ணபுரம் பெருமாள் ஆலயத்தின் மேற்கில் தொடங்கும் திருக்கண்ணபுரம் – வடகரை – ஆண்டிபந்தல் சாலையில் 3. கி.மீ யில் பிரதான சாலையின் இடதுபுறம் ஆலயம் சிகாநாதர் – கோலாம்பிகை சிவன் ஆலயம். கிழக்குப் பார்த்த அழகான சிறிய ஆலயம். சிகாநாதர் சிவலிங்க பாணம் உயரமானது. முன் குடுமி அமைப்பில் இருப்பதால் சிகாநாதர் அல்லது குடுமி நாதர். சில ஆண்டுகளுக்கு முன் ஆரூர் குடமுழுக்கு அன்றே இந்த ஆலயமும் குடமுழுக்கு செய்யப்பட்டுள்ளது. அம்மன் தனி சன்னதி தெற்கு பார்த்துள்ளது. ஆலயத்துள் வினாயகர், முருகன், நவகிரகம், பைரவர், மேலும், நல்வர், தனி ஈசன் உள்ளார்கள். ஏராளமான கல்வெட்டுக்கல் கருவரை சுற்று சுவரில் உள்ளது. முழுதும் கற்றளி புராதானமான தலம். அருகில் வசிப்பவர்களிடம் சாவி வாங்கி தரிசிக்கலாம். கருவரை மேற்கு புறத்தில் உள்ள பெருமாளுக்கு புரட்டாசி சனிக்கிழமையில் அபிஷேகம். ஆராதணை வழிபாடு. ஆலயம் முழுதும் சிறிய செடிகள் முளைத்து நெறிஞ்சி முள் நிறைந்துள்ளது. # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருக்கண்ணபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி