திருஅநேகதங்காவதம் (கௌரிகுண்டம்), உத்தரகண்ட்
முகவரி
திருஅநேகதங்காவதம் (கௌரிகுண்டம்), உத்தரகண்ட், இந்தியா- 246471
இறைவன்
இறைவன்: அநேகதங்காவதநாதர், இறைவி: மனோன்மணி
அறிமுகம்
கவுரிக்குண்ட் கடல் மட்டத்திலிருந்து சுமார் 4000 மீட்டர் உயரத்தில் உள்ள ஒரு பிரபலமான இமயமலை ஆலயம் ஆகும், அங்கு கவுரி (பார்வதி) சிவனை தியானித்ததாக நம்பப்படுகிறது. சூர்யா மற்றும் சந்திராவும் இங்கு சிவனை வழிபட்டதாக நம்பப்படுகிறது. இந்த சன்னதி ரிஷிகேஷ் மற்றும் கேதார்நாத் இடையேயான பாதையில் அமைந்துள்ளதுகௌரி குண்டம் இது உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்வால் கோட்டத்தின் இமயமலையில் 6,520 அடி உயரத்தில் அமைந்துள்ளது. கௌரி குண்டத்தில் வெந்நீர் ஊற்றுகள் ஊரும் குண்டம் உள்ளது. இத்தலத்தில் உள்ள குளத்தில் குளித்த பின்னரே பார்வதி தேவி, சிவபெருமானை மணந்து விநாயகரை உருவாக்கியதாக இந்து தொன்மவியல் நம்பிக்கை ஆகும். கௌரி குண்டத்திலிருந்து 13 கிமீ தொலைவில் இமயமலையில் கேதார்நாத் கோயில் உள்ளது.இந்தியாவின் உத்தராகண்ட் மாநிலத்தின் ருத்திரப்பிரயாகை மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயிலுக்குச் செல்லும் வழியில் அமைந்த கௌரி குண்டம், இந்துக்களின் புனித யாத்திரைத் தலம் ஆகும்.
நம்பிக்கைகள்
இத்தலத்தில் உள்ள குளத்தில் குளித்த பின்னரே பார்வதி தேவி, சிவபெருமானை மணந்து விநாயகரை உருவாக்கியதாக இந்து தொன்மவியல் நம்பிக்கை ஆகும்.
சிறப்பு அம்சங்கள்
இக்குண்டத்தில் வெந்நீர் ஊற்று உள்ளது. ருத்திரப்பிரயாகை மாவட்டத்தில் உள்ள கேதார்நாத் கோயிலின் அடிவாரம்.
காலம்
1000 -2000ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ரிஷிகேஷ்
அருகிலுள்ள இரயில் நிலையம்
ரிஷிகேஷ்
அருகிலுள்ள விமான நிலையம்
டேராடூன்