Sunday Jan 26, 2025

தினம் ஒரு திருவாசகம் சிந்திக்க🍁☘️

மணிவாசகப் பெருமான் திருப்பெருந்துறையில் அருளிச்செய்த திருவாசகத்தில் பிடித்தப்பத்து திருப்பதிகம்

🌸🌺🌹🌼🌻💐🌷🍁🌹🌺🌸

பாடல் எண்:8-37-10

அற்பமாகிய புலால் உடம்பு, மயிர்க்கால்தொறும் நெகிழ்ச்சியையுடைய அது, பொன்னாலாகிய பெரிய கோயிலாகும் படி, அதனுள் எழுந்தருளியிருந்து, என்னுடைய எலும்புகளை யெல்லாம் உருகும்படி செய்து, எளியவனாகி ஆட்கொண்டருளிய ஆண்டவனே! குற்றமற்ற மாணிக்கமே! துன்பமும் பிறப்பும் இறப்பினோடு மயக்கமும் ஆகிய பற்றுக்களெல்லாம் அறுத்தருளின மேலான சோதியே! ஆனந்தமே! உன்னை உறுதியாகப் பற்றினேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது.

🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

🍀பொழிப்புரை:-🍀

பாலை, காலமறிந்து கொடுக்கின்ற தாயைக் காட்டிலும் மிகவும் அன்பு கொண்டு, நீ பாவியாகிய என்னுடைய உடம்பை உருக்கி, உள்ளத்தில் ஞானத்தை பெருக்கி, அழியாத இன்பமாகிய தேனைப் பொழிந்து நான்கு புறங்களிலும் உடன் திரிந்த அருட்செல்வமே! சிவபிரானே! நான் உன்னைத் தொடர்ந்து உறுதி யாகப் பற்றியுள்ளேன். நீ இனிமேல் எங்கே எழுந்தருளிச் செல்வது?

🙏🏻🙏🏻🙏🏻திருச்சிற்றம்பலம்🙏🏻🙏🏻🙏🏻

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top