திட்டாணி முட்டம் தினேஷ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி
திட்டாணி முட்டம் தினேஷ்வரர் சிவன்கோயில், திட்டாணி முட்டம், குடவாசல் வட்டம், திருவாரூர் மாவட்டம் – 614103.
இறைவன்
இறைவன்: தினேஷ்வரர் இறைவி: மீனாட்சி
அறிமுகம்
திட்டாணி என்றால் வெண்ணிற பூக்கோலம் என பொருள். முட்டம் என்றால் மேடான திடல் பகுதி என பொருளுண்டு வெண்ணிற பூக்கள் பூக்கும் திடல் என பொருள் கொள்ளலாம். இவ்வூர் பாண்டவை ஆற்றின் தென்கரையில் உள்ளது. கொரடாச்சேரியில் இருந்து கண்கொடுத்தவனிதம் சாலையில் ஆறு கிமி தூரம் வந்தால் முசிறியம் அங்கிருந்து பாண்டவை ஆற்றினை கடக்க பாலம் உள்ளது. இவ்வூர் பழமையான கோயில் சிதைந்து விட்டபின் புதிதாய் சிறிய தெரு முனை கோயிலாக உருவெடுத்துள்ளது தற்போதுள்ள கோயில். இறைவன் சூரியனால் வணங்கப்பட்டவர் என்பதால் தினேஷ்வரர் என பெயர். இறைவியின் பெயர் மீனாட்சி. இறைவன் சற்று பெரிய லிங்கமாக உள்ளார், இறைவி தெற்கு நோக்கிய சிறிய சன்னதியில் உள்ளார். பிரகாரத்தில் சண்டேஸ்வரர் நவகிரகங்களும் உள்ளன. கோயிலை ஒட்டி பழமையான இலுப்பை மரம் உள்ளது. வடபுறம் பெரிய குளம் உள்ளது. தினேஷ்வரர் எனும் பெயர் கொண்ட இறைவன் காண கிடைத்தல் அரிது. வாழ்க்கையில் ஒரு கட்டத்தில் நாம் பிடுங்கிய அத்தனை ஆணிகளுமே தேவையில்லாத ஆணிகள் தான் என தோன்றும் அப்போது இறைவனை மனதால் மட்டுமே தரிசிக்க இயலும். உடலில் தெம்பிருக்கும்போதே செல்வோம் கிராமசிவாலயம். # ” உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திட்டாணி முட்டம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி