Thursday Dec 19, 2024

தாழம்பூர் ஸ்ரீ சைலேஸ்வரர் சிவன்கோயில், காஞ்சிபுரம்

முகவரி

தாழம்பூர் ஸ்ரீ சைலேஸ்வரர் சிவன்கோயில், தாழம்பூர், திருப்போரூர் வட்டம், காஞ்சிபுரம் மாவட்டம்- 600 130.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ சைலேஸ்வரர் இறைவி: ஸ்ரீ மரகதாம்பிகை

அறிமுகம்

தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள திருப்போரூர் வட்டாரத்தில் அமைந்துள்ளது இந்த தாழம்பூர் கிராமம். தாழம்பூர், நாவலூர் அருகில் உள்ளது. தாம்பரம், அடையாறு இடங்களிலிருந்து இங்கு பேருந்துகள் வருகின்றன. குளக்கரையில் வானம் பார்த்து இருந்த சிவலிங்கத்தை எடுத்து திருமதி பவானி என்பவர் மற்றவர் துணைகொண்டு சிறிய ஆலயம் அமைத்துள்ளார். ஸ்வாமி திருநாமம் ஸ்ரீ சைலேஸ்வரர் . அம்பாள் ஸ்ரீ மரகதாம்பிகை. விநாயகர், முருகன், சண்டிகேஸ்வரர், பைரவர், நவக்கிரகம், தக்ஷிணாமூர்த்தி, விஷ்ணு துர்கை போன்றவை புதிதாக பிரதிஷ்டை செய்யப்பட்டவை. எதிரில் அழகான குளம் உள்ளது. குளக்கரையில் பழைய நந்தி சிலை காணப்படுகிறது. மற்ற விவரங்கள் அறிய திருமதி பவானி- 9962151046, திரு பாலசுப்ரமணியன்-91761 03629.

காலம்

1000-2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தாழம்பூர்

அருகிலுள்ள இரயில் நிலையம்

தாம்பரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top