தப்பளாம்புலியூர் கங்கைகொண்ட ஈஸ்வரர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
தப்பளாம்புலியூர் கங்கைகொண்ட ஈஸ்வரர் சிவன்கோயில்,
தப்பளாம்புலியூர், திருவாரூர் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610106.
இறைவன்:
கங்கைகொண்ட ஈஸ்வரர்
இறைவி:
கங்கைகொண்டஈஸ்வரி
அறிமுகம்:
திருவாரூருக்கு தென்கிழக்கில் 5 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிறிய கிராமம் தப்பளாம்புலியூர். நாகை செல்லும் புறவழி சாலையில் இருந்து பிரியும் புதுப்பத்தூர் சாலையில், மூன்று கிமீ தொலைவில் கடுவையாற்றை தாண்டியதும் உள்ளது. வியாக்ரபாதர் சிவலிங்கம் நிறுவி ஆலயம் அமைத்த 9 வியாக்ரபுரங்களில் இதுவும் ஒன்று. தற்பரன் புலியூர் என்பதே இதன் பழம் பெயர். தற்பரன் என்றால் இறைவன், இவ்வூரில் ஆறு கோயில்கள் ஆறு குளங்கள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு கொண்டவை.
இரு சிவன்கோயில்கள் உள்ளன, முதலாவது கோயில் சற்று பெரிய கோயில் வியாக்ரபாதர் மற்றும் மண்டூகம் வழிபட்டது. இன்று நாம் பார்ப்பது பிரசித்தி பெற்ற குளுந்தாளம்மன் கோயில் அருகில் உள்ள இரண்டாவது திருக்கோயில். பெரிய குளத்தின் வட கரையில் உள்ளது, கிழக்கு நோக்கிய சிறிய கோயில் இறைவன் – கங்கைகொண்ட ஈஸ்வரர், இறைவி – கங்கைகொண்டஈஸ்வரி இறைவன் பெரிய லிங்கமூர்த்தியாக உள்ளார். இறைவி தெற்கு நோக்கி தனி சன்னதி கொண்டுள்ளார். இறைவனின் கருவறை வாயிலில் அருகில் அழகிய விநாயகர் ஒருவர் உள்ளார். முகப்பு மண்டப வாயிலில் ஜெயன் விஜயன் எனும் இரு துவார பாலகர்கள் உள்ளனர். கருவறை வாயில் அருகில் ஒரு விநாயகரும் உள்ளார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
தப்பளாம்புலியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி