ஜக்கு மலை அனுமன் கோயில், சிம்லா

முகவரி :
ஜக்கு மலை அனுமன் கோயில்,
ஜக்கு, சிம்லா,
இமாச்சலப்பிரதேசம் – 171001.
இறைவன்:
அனுமன்
அறிமுகம்:
ஜக்கு கோயில் இந்தியாவிலுள்ள சிம்லாவில் அமைந்துள்ளது. இது, ஒரு பழங்கால கோயிலாகும். இக்கோயில், அனுமனுக்கு அர்ப்பணிக்கப்பட்டதாகும். இது, சிம்லாவில் உள்ள உயரமான சிகரமான, ஜக்கு மலையில் 2.5 km உயரத்தில் ரிட்ஜின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ளது. ஒவ்வொரு ஆண்டும், விஜயதசமி அன்று ஒரு திருவிழா இங்கு நடத்தப்படுகிறது, 1972க்கு முன்பு, சிம்லாவிலுள்ள அன்னடேலில் இத்திருவிழா நடத்தப்பட்டது.
இராமாயணத்தின்படி, இலட்சுமணனை உயிர்ப்பிக்க சஞ்சீவினி மூலிகையைத் தேடும் போது அனுமன் ஓய்வெடுப்பதற்காக இந்த இடத்தில் நின்றார் என கருதப்படுகிறது. 2010 நவம்பர் 4, அன்று ஜக்கூ அனுமன் கோவிலில் 108 அடி உயரமுள்ள (33 மீ) ஒரு பெரிய அனுமான் சிலை திறக்கப்பட்டது. இது பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் உள்ள இயேசு கிறிஸ்துவின் சிலையை விட அதிக உயரமுடையதாகும். ஜக்கு அனுமன் கோயிலின் கட்டுமான செலவு ரூ.1.5 கோடி ஆக மதிப்பிடப்படுகிறது.
இக்கோயிலுக்கு, நடைபயணம், குதிரை, மகிழுந்து அல்லது இழுவைப்பெட்டி மூலம் அணுகும் வழி உள்ளது. ஜக்கு இழுவைப்பெட்டி என்பது சிம்லாவின் மையத்திற்கு அருகிலுள்ள ஒரு புள்ளியை இக்கோயிலுடன் இணைக்கும் வான்வழி தடமாகும். இதை ஜாக்சன் சர்வதேச நிறுவனம் உருவாக்கியது. மேலும், 2017 இல், மக்கள் பயன்பாட்டிற்காகத் திறக்கப்பட்டது.



காலம்
1000 -2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஜக்கு
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிம்லா
அருகிலுள்ள விமான நிலையம்
சிம்லா