சோழன்தாங்கல் சிவன்கோயில், காஞ்சிபுரம்
முகவரி
சோழன்தாங்கல் சிவன்கோயில், சோழன்தாங்கல், காஞ்சிபுரம் மாவட்டம் – 603 306. தொடர்புக்கு திரு 7871152813, திரு வேலு-9791008175, திரு விஜயகுமார்- 9080562340.
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
அந்நியர் படையெடுப்பின்போது மறைக்கப்பட்ட பல மூர்த்தங்கள் மண்ணிலும், கிணற்றிலும், குளத்திலும் உண்டு. அதில் ஒன்றுதான் சோழன்தாங்கல் கிராமத்தில் உள்ள சிவன். மிகவும் பெரிய பாணம். கீழே தோண்டத்தோண்ட அடியை காணமுடியாது அப்படியே விட்டு விட்டார்கள் ஊர்மக்கள். தற்காலிகமாக ஒரு கூரை அமைக்கப்பட்டுள்ளது. அவரவர் இங்கு வந்து பூஜை செய்கிறார்கள். ஊரைத் தாண்டி காட்டில் ஏகாந்தமாக இறைவன் காட்சி அளிக்கிறார். வண்டலூர் கேளம்பாக்கம் சாலையில் மாம்பாக்க கூட் ரோடில் காயார் செல்லும் சாலையில் 9 கிமி சென்றால் சோழன்தாங்கல் கிராமத்தை அடையலாம். தாம்பரம் காயார் செல்லும் பேருந்துகள் இங்கு வருகின்றன.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சோழன்தாங்கல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
காஞ்சிபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை