Wednesday Dec 18, 2024

செம்பாக்கம் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்), காஞ்சிபுரம்

முகவரி

செம்பாக்கம் ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்) செம்பாக்கம், காஞ்சிபுரம் மாவட்டம்- 603312.

இறைவன்

இறைவன்: ஸ்ரீ ஜம்புகேஸ்வரர் இறைவி: ஸ்ரீ சுந்தராம்பிகை

அறிமுகம்

கோச்சங்க சோழன் புத்திரபாக்கியமின்றி பல தலங்களுக்கு சென்றுவரும் நேரத்தில் இவ்வூர் வந்து இரவில் தங்கிய போது அரசன் கனவில் இறைவன் தோன்றி தமக்கு திருவானைக்காவில் உள்ளது போன்று ஆலயம் கட்ட உத்தரவிட்டபடி அரசனும் உடனே ஆலயம் அமைத்து இறைவனை வழிபட்டான். அரசனுக்கு புத்திர பாக்கியம் ஏற்பட்டது. இங்கும் நாவல் மரம் தலவிருச்சமாக உள்ளது. கொடி மரத்துடன் அமைந்துள்ள இக்கோயிலில் எல்லா சன்னதிகளும் உள்ளன. ஸ்வாமி கருவறையில் குளத்து நீர் வருமாறு கட்டப்பட்டுள்ளது. ஆலய திருக்குளம் வெளியில் காணப்படுகிறது. ஸ்ரீ சுந்தராம்பிகை அம்பாள் திருநாமம். செம்பாக்கம், திருப்போரூரிலிருந்து 7 KM செங்கல்பட்டு சாலையில் உள்ளது. மேலும் தொடர்புக்கு திரு நாகராஜ குருக்கள்-9841171692, திரு விக்னேஷ்-9600028603

நம்பிக்கைகள்

புத்திரபாக்கியம் வேண்டுவோர் இங்குவந்து இறைவனை 11 தடவை வலம் வந்து பிரார்த்தனை செய்து கொண்டால் புத்திர பாக்கியம் ஏற்படும்.

காலம்

1000 – 2000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

செம்பாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top