சென்னிநத்தம் சென்னீஸ்வரர் சிவன்கோயில், கடலூர்

முகவரி :
சென்னிநத்தம் சென்னீஸ்வரர் சிவன்கோயில்,
சென்னிநத்தம், சிதம்பரம் வட்டம்,
கடலூர் மாவட்டம் – 608301.
இறைவன்:
சென்னீஸ்வரர்
அறிமுகம்:
வெள்ளாற்றின் கரையில் அமைந்துள்ளது சேத்தியாதோப்பு, சிதம்பரத்தின் மேற்கில் இருபது கிமீ. தொலைவில் உள்ளது. சேத்தியாத்தோப்பின் பேருந்து நிலையத்தின் கிழக்கில் ஒரு கிமீ. தூரத்தில் உள்ளது தான் சென்னிநத்தம். சென்னிநத்தம் மேல்நிலைப்பள்ளியை தாண்டியதும் இடது பக்க சாலையில் திரும்பினால் சிவன்கோயில் உள்ளது. இது ஒரு ஒற்றை கருவறை சிவன் கோயில். இறைவன் சென்னீஸ்வரர் கிழக்கு நோக்கியுள்ளார். முகப்பில் ஒரு மண்டபம் உள்ளது இறைவன் எதிரில் ஒரு நந்தி உள்ளது. இறைவி சன்னதியோ வேறெந்த சன்னதிகளோ இல்லை.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.



காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சென்னிநத்தம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி
Location on Map
