செங்கல் மகேஸ்வரம் ஸ்ரீ சிவபார்வதி கோவில், கேரளா
முகவரி
செங்கல் மகேஸ்வரம் ஸ்ரீ சிவபார்வதி கோவில், (உலகின் உயரமான சிவலிங்கம்), உதியங்குளக்கரை விளதங்கரா சாலை, செங்கல், கேரளா – 695132
இறைவன்
இறைவன்: சிவன் இறைவி: பார்வதி
அறிமுகம்
தமிழக கேரள எல்லை மாவட்டமான கன்னியாகுமரியில் உதியங்குளக்கரை என்னும் இடத்தில் செங்கல் மகேஸ்வர சிவ பார்வதி ஆலயம் அமைந்துள்ளது. இந்த கோவில் வரலாற்று சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆலயத்தில் உலகில் உயரமான சிவலிங்கம் அமைக்க ஆலய நிர்வாகம் முடிவு செய்தது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் உள்ள் சிவன் கோவில்களை பார்வை இட்ட பிறகு இந்த லிங்கத்தின் வடிவமைப்பு இறுதி செய்யப்பட்டது. கடந்த 2012 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பணி தற்போது முடிவடைந்துள்ளது. இந்த லிங்கத்தின் உயரம் 111.2 அடி ஆகும். எட்டு நிலைகளில் உருவாகும் இந்த லிங்கத்தின் ஒவ்வொரு நிலையிலும் தியான மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சிவலிங்கத்தின் உள்ளே முனிவர்கள் குகையில் தவம் செய்வது, கடவுளர்களின் உருவங்கள் ஆகியவை சிலைகளாக செதுக்கப்பட்டுள்ளன. மேல் பகுதியான எட்டாம் நிலையில் கைலாய மலையில் சிவனும் பார்வதியும் உள்ளது போன்ற அழகிய சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிவலிங்கத்தை இந்தியா புக் ஆஃப் ரிக்கார்ட் இன் ஒருங்கிணைப்பாளர் ஷாகுல் தலைமையிலான குழு ஆய்வு நடத்தியது. அதன் பிறகு அந்த குழு இந்த லிங்கத்துக்கு உலகின் உயரமான சிவலிங்கம் என சான்று அளித்துள்ளது.
புராண முக்கியத்துவம்
‛தட்சிண கைலாசம்’ என்றழைக்கப்படும், கேரளாவில் உள்ள செங்கல் மகேஸ்வரம் சிவபார்வதி கோயில், உலகில் வேறெங்கும் இல்லாத தனிச்சிறப்புகளை கொண்டது. சிவனும் பார்வதியும் ஒரே மூலவராக காட்சி தரும் கோயில், ஐந்தாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிவனும், பார்வதியும் மண்புற்று வடிவில் இங்கு தோன்றியதாக ஐதீகம். தேவபிரசன்னம் பார்த்த போது இது தெரிந்து, 2017 ல் அந்த இடத்தில் கோயில் கட்டப்பட்டது. கேரள பாரம்பரிய கோயில் கட்டட கலையை பின்பற்றி, மரம் மற்றும் அபூர்வ இன பாறை கற்களால் மூன்றடுக்காக இராஜகோபுரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோயிலின் கிழக்கு வாசலில், சிவபார்வதியை பார்த்திருக்கும் நந்தியும், கோயிலில் நுழையும் போது நம்மை வரவேற்கும் யானை சிலைகளும் தத்ரூபமாக காட்சியளிக்கின்றன. சிவபரிவார தரிசனத்தை முடித்து விட்டால், அந்த வளாகத்தில், சிவபார்வதியை சுற்றி பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள 12 ஜோதிர்லிங்கங்களை தரிசிக்கலாம். இவை இந்தியாவின் பல பாகங்களில் இருந்தும் கொண்டு வரப்பட்டவை. தோஷம், நோய் நீங்க பக்தர்கள் ஜோதிர்லிங்கங்களை வழிபடுகின்றனர். இக்கோயிலுக்கு வெளியே தனிக்கட்டடத்தில் விநாயகரின் 32 வடிவங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. பாலகணபதி, பக்தி கணபதியில் துவங்கி வீர கணபதி, யோக கணபதி வரை அத்தனை விக்ரகங்களும் ஒரே இடத்தில் உள்ளன. மகாலிங்கம்: சிவபார்வதி கோயில் வளாகத்தின் வடமேற்கு திசையில் உலகின் மிக உயரமான, பிரம்மாண்ட 111 அடி சிவலிங்கம் உள்ளது. ஐந்தாண்டுகளாக, நுாற்றுக்கணக்கான தொழிலாளர்கள் உழைப்பில் பல கோடி ரூபாய் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ள மகா சிவலிங்கம் 2019 நவம்பரில் திறக்கப்பட்டது. இதில் பயன்படுத்தப்பட்ட மண், தண்ணீர், ஆயுர்வேத மூலிகை பொருட்கள் அனைத்தும் நாட்டின் பல புனித தலங்களில் இருந்து கொண்டுவரப்பட்டவை. எட்டடுக்கு கொண்ட இந்த சிவலிங்கத்திற்குள் நுழைந்தவுடன், கீழ் தளத்தில் பெரிய சிவலிங்கம் உள்ளது. அதற்கு பக்தர்களே பூஜை செய்யலாம். தொடர்ந்து ஆறு தளங்களில் தியான அறைகள் உள்ளன. அவற்றில் சிவனின் வடிவங்கள், சிவலிங்கம், முத்திரைகள், சக்கரங்கள் வெவ்வேறு நிறங்களில் வடிவமைக்கப்பட்டுள்ளன. இங்கு தியானம் செய்யலாம். அங்கு பிரதிஷ்டையாகி உள்ள லிங்கங்களை வழிபடலாம். எட்டாவது தளம் கைலாசம் போன்று உருவாக்கப்பட்டு அதில் சிவன், பார்வதி காட்சி தருகின்றனர். மகாசிவலிங்கத்தின் சுவர்களில் மாமுனிவர்களின் படங்கள் நேர்த்தியாக வரையப்பட்டுள்ளன. சிவபெருமானின் 64 நிலைகளையும், இந்தியாவின் 108 சிவாலயங்களின் சிறிய சிவலிங்கங்களையும் இதற்குள் காணலாம். ஒரு குகைக்குள் செல்வது போன்று எட்டு தளங்களும் உள்ளன. போதிய காற்றோட வசதி, வெளிச்சம் உண்டு. உள்ளே செல்பவர்கள் வரிசையாக செல்ல வேண்டும். அலைபேசிக்கு அனுமதி இல்லை. கல்லிலே கைவண்ணம் கண்ட வித்தியாசமான கணபதி வடிவங்களை புகைப்படம் எடுக்கவும் அனுமதி உண்டு.
நம்பிக்கைகள்
பிரசாதம் வழங்குவதன் மூலமும், த்வாதச ஜோதிர்லிங்கத்தின் வடிவத்தில் சிவபெருமானின் ஆசீர்வாதத்தின் மூலமும் அனைத்து வகையான தோஷம் (துரதிர்ஷ்டம்) மற்றும் நோய் அவர்களின் வாழ்வில் இருந்து அகற்றப்படும் என்று நம்பப்படுகிறது. உலகெங்கிலும் உள்ள பக்தர்கள் மகேஸ்வரம் ஸ்ரீ சிவபார்வதி கோவிலுக்கு முழு துவாதசையும் (12) ஜோதிர்லிங்கத்தை ஒன்றாக வழிபடுவது சிறப்பாகும்.
சிறப்பு அம்சங்கள்
மகேஸ்வரம் ஸ்ரீ சிவன் பார்வதி கோவிலின் 111.2 அடி கட்டமைப்பை இந்தியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் உயரமான சிவலிங்கம் என்று சான்றளித்தது. இந்த அமைப்பு 8 நிலைகளைக் கொண்டுள்ளது, அவற்றில் ஆறு சக்கரங்கள், மனித உடலில் உள்ள ஆற்றல் மையங்களைக் குறிக்கிறது, இதில் பக்தர்கள், யாத்ரீகர்கள், அந்தந்த சக்கரங்களை தியானிக்க 6 தியான மண்டபங்கள் உள்ளன. பக்தர்கள் ‘அபிஷேகம்’ செய்யக்கூடிய முதல் தளத்தில் 108 சிவலிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. கைலாசத்தில் உள்ள சிவன்-சக்தி ஸ்வரூபத்தின் சந்நிதியில் “பஞ்சக பஞ்சாக்ஷரி மந்திரம்” என்ற மகா சிவலிங்கத்தை உச்சரிப்பது சுய உணர்தல் அடைகிறது. இது ஒரு வகையான ஆன்மீக அனுபவத்திற்காக நாட்டில் தனித்துவமான கட்டமைப்பாகும். சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்கத்தையும், விநாயகரின் 32 வடிவங்களையும் ஒரே இடத்தில் பக்தர்கள் வழிபடக்கூடிய உலகின் ஒரே கோயில் இதுவாகும்.
திருவிழாக்கள்
மகாசிவராத்திரி, துர்கா பூஜை
காலம்
5000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
செங்கல்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவனந்தபுரம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருவனந்தபுரம்