Thursday Dec 26, 2024

சுந்தராபுரம் வாலீஸ்வரர் திருக்கோயில், கோயம்புத்தூர்

முகவரி :

அருள்மிகு வாலீஸ்வரர் திருக்கோயில்,

சுந்தராபுரம்,

கோயம்புத்தூர் மாவட்டம் – 641024.

போன்: +91 99446 58646.

இறைவன்:

வாலீஸ்வரர்

இறைவி:

வடிவாம்பிகை

அறிமுகம்:

கோவை மாவட்டம் சுந்தராபுரம் குறிச்சி பகுதியில் அமைந்துள்ள வடிவாம்பிகை உடனமர் வாலீஸ்வரர் சுவாமி கோவில், திரேதாயுகத்தில் ராமாயண காலத்தில் வாலியால் பூஜிக்கப்பட்ட சிவன்கோயில் ஆகும். நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள 38 சிவன்கோயில்களில் 3ம் நூற்றாண்டில் கரிகாலசோழனால் திருப்பணி செய்யப்பட்டது இக்கோயில்.   கோவை பேரூர் புராணத்தில் அமரபயங்க சோழன் செப்பேட்டில் கி.பி.987–1018 வரை சொல்லப்பட்ட பழம் பெருமை வாய்ந்த 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சிவன்கோயில் ஆகும். சிவன், பார்வதிக்கு நடுவில் திருமணகோலத்தில் வள்ளி,தெய்வானையுடன் முருகப்பெருமான் சோமாஸ்கந்தராக அமையப்பெற்றுள்ளார். கோவை காந்திபுரம், உக்கடம், சிங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் இருந்து வரும் பக்தர்கள் குறிச்சி குளம் என்ற பஸ்டாப்பில் இறங்கினால் அருகே உள்ளது இந்த கோயில்.

நம்பிக்கைகள்:

 வடிவாம்பிகையிடம் திருமணம், புத்திரப்பேறு வேண்டுதல், காலபைரவரிடம் சத்ரு பயம் நீங்குதல், சுப்ரமண்யரிடம் தொழில் வளர்ச்சிக்கு பிரார்த்திக்கின்றனர்.

சிறப்பு அம்சங்கள்:

கிழக்கு திசைநோக்கி அமைந்துள்ள இக்கோயிலின் வெளி பிராகாரத்தை 12 முறை வலம் வந்தால் திருமணம், குழந்தை பேறு ஆகிய வரங்கள் கிடைக்கும் என்பது நம்பிக்கை. கோயிலுக்கு வரும் பக்தர்கள் முதலில் பிரகாரம் சுற்றி வந்து ஆதி விநாயகரை வழிபட்டு, நந்தி, வல்லப விநாயகரை தரிசித்து, மூலவர் வாலீஸ்வரரை தரிசிக்க வேண்டும். பின்னர் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரணமணியர், வடிவாம்பாள், நடராஜர் ஆகியோரை வணங்கி நவக்கிரகங்களை தரிசிக்கலாம்.

திருவிழாக்கள்:

ஐப்பசி சூரசம்ஹாரம், தைமாதம் ஆண்டுவிழா, புரட்டாசி சிவராத்திரி இங்கு கொண்டாடப்படுகிறது.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

அருகிலுள்ள பேருந்து நிலையம்

குறிச்சி குளம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கோயம்புத்தூர்

அருகிலுள்ள விமான நிலையம்

கோயம்புத்தூர்

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top