சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேசுவர சுவாமி கோயில், ஆந்திரப்பிரதேசம்
முகவரி
சீனிவாசமங்காபுரம் ஸ்ரீ கல்யாண வெங்கடேசுவர சுவாமி கோயில், சீனிவாசமங்காபுரம், சித்தூர் மாவட்டம், ஆந்திரப்பிரதேசம் – 517101.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ கல்யாண வெங்கடேசுவர சுவாமி இறைவி: பத்மாவதி
அறிமுகம்
கல்யாண வெங்கடேசுவர சுவாமி கோயில் என்பது சீனிவசமங்கபுரத்தில் அமைந்துள்ள பழங்கால வைணவ கோயில் ஆகும். இது இந்தியாவின் ஆந்திராவின் சித்தூர் மாவட்டத்தில் திருப்பதியிலிருந்து 12 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த கோயில் விஷ்ணுவின் ஒரு வடிவமான வெங்கடாசலபதிக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மூலம் இந்த கோயில் தேசிய முக்கியத்துவத்தின் பண்டைய நினைவுச்சின்னமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களில் ஒன்றாகவும் உள்ளது. தற்போது இந்த கோவிலைத் திருமலை திருப்பதி தேவஸ்தானம் நிர்வகித்து வருகின்றது. திருமலையில் உள்ள ஸ்ரீவெங்கடாசலபதி கோயிலுக்கு அடுத்ததாக இந்த கோயில் புனிதமாகக் கருதப்படுகிறது. இந்தியாவின் தொல்பொருள் ஆய்வு மூலம் இந்த கோயில் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த பண்டைய நினைவுச்சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
புராண முக்கியத்துவம்
பத்மாவதி தாயாருக்கும் சீனிவாச பெருமாளுக்கும் நாராயணவனம் என்னும் இடத்தில் திருமணம் நடந்து முடிந்ததும், சீனிவாச பெருமாள் பத்மாவதி தாயாருடன் திருமலைக்குப் புறப்பட்டார். அப்போது மணமக்கள் இருவரும் வேங்கட மலைக்கு செல்லும் வழியில் அகத்தியர் ஆஸ்ரமத்திற்கு சென்றனர். அவர்களுக்கு அகத்தியர் தடபுடலாக விருந்தளித்தார். அப்போது அகத்தியர், ‘திருமணமான தம்பதிகள் ஆறு மாதத்துக்கு மலையேறக் கூடாது’ என கூறிவிட்டார். மகரிஷியின் வார்த்தைக்கு மறுப்பேது? அகத்திய மகரிஷி கூறியபடி, பெருமாளும், பத்மாவதி தாயாரும் திருமலைக்கு செல்லாமல் அங்கேயே தங்கிவிட்டனர். அப்படி பெருமாள் தங்கிய தலம்தான் இப்போதைய சீனிவாசமங்காபுரம் என்று கூறப்படுகிறது. சீனிவாசனும், அலமேலு மங்கையாகிய பத்மாவதியும் தங்கியதால் இருவரின் பெயராலும் சீனிவாசமங்காபுரம் என அழைக்கப்படுகிறது. புராதன காலத்தில் சித்புருஷர்கள் தவம் செய்த இடமானதால் சித்தர் கூடம் என்றும் அழைக்கப்படுகிறது. சீனிவாசமங்காபுரத்தில் 8 அடி உயரத்தில் கம்பீரமான வாலிப வடிவத்திலும், சீனிவாசமங்காபுரம் கோயிலில் உள்ள கருவறையில் பெருமாள் மூன்று திருக்கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நடுநாயகமாக சீனிவாச பெருமாளாக நின்ற திருக்கோலத்திலும், வலது புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த திருக்கோலத்திலும் காட்சியளிக்கிறார். இடது புறம் ஸ்ரீரங்கநாதரைப் போல் சயனக் கோலத்திலும் சேவை சாதிக்கிறார்.
நம்பிக்கைகள்
திருமலையில் பெருமாளை நீண்டநேரம் காத்திருந்து தரிசிக்க முடியாத குறையைப் போக்க விரும்புபவர்கள், இந்தத் தலத்துக்கு வந்து, தாங்கள் விரும்பும் அளவுக்கு எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பெருமாளை தரிசித்து மகிழலாம். பக்தர்கள் தங்களுக்கு திருமணம் கைக்கூடவும், கடன்தொல்லையில் இருந்து விடுபடவும், சகல செல்வங்களும் கிடைக்க பெருமாளை வேண்டி செல்கின்றனர். வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பெருமாளுக்கும், தாயாருக்கும் அபிஷேகம் செய்து திருமஞ்சனம் சாற்றி நேர்த்திகடன் செலுத்துகின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
சீனிவாசமங்காபுரம் கோயிலில் உள்ள கருவறையில் பெருமாள் மூன்று திருக்கோலங்களில் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். நடுநாயகமாக சீனிவாச பெருமாளாக நின்ற திருக்கோலத்திலும், வலது புறம் லட்சுமி நாராயணராக அமர்ந்த திருக்கோலத்திலும், இடது புறம் ஸ்ரீரங்கநாதரைப் போல் சயனக் கோலத்திலும் சேவை சாதிக்கிறார்.
திருவிழாக்கள்
பிரம்ம உற்சவம் 9 தினங்கள் நடைபெறுகிறது, ஏகாதசி, இங்கு ஆறு கால பூஜைகளும் நடைபெறுகிறது
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
திருமலை திருப்பதி தேவஸ்தானம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சீனிவாசமங்காபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சந்திரகிரி
அருகிலுள்ள விமான நிலையம்
திருப்பதி