Sunday Nov 24, 2024

சீதாமர்ஹி கோவில்களின் குழு, மத்திய பிரதேசம்

முகவரி

சீதாமர்ஹி கோவில்களின் குழு, துபோன், மத்திய பிரதேசம் 473446

இறைவன்

இறைவன்: சிவன்

அறிமுகம்

மத்தியப்பிரதேசத்தின் அசோக் நகர் மாவட்டத்தில் துபோன் உள்ளது. துபோனில், மண்டபிகா கோவில்களில் 3 அல்லது 4 குழுக்கள் உள்ளன. அவற்றில் ஒன்று சீதாமர்ஹி கோவில்களின் குழு. சீதாமர்ஹி குழுவில் துபோன் கிராமத்திலிருந்து 2 கிலோமீட்டர் தெற்கே சிறிய மற்றும் பெரிய அளவில் 15 கோயில்கள் உள்ளன. இது கிபி 10-11 ஆம் நூற்றாண்டில் சைவ மையமாக இருந்தது. பதினைந்து கோவில்களில் பதினான்கு கோயில்கள் வளாகத்திற்குள் அமைந்துள்ளன, அதே சமயம் பிரதான கோவில் வளாகத்தின் வடக்குப் பகுதியில் சுமார் 500 மீ. தொலைவில் உள்ளது. இந்த வளாகத்தில் பிராதன கோவிலை சுற்றி 13 மண்டபிகா சிவாலயங்கள் அமைந்துள்ளது. இவையனைத்தும் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. சில சிவாலயங்கள் இடிந்த நிலையில் உள்ளன. 9 ஆம் நூற்றாண்டை சேர்ந்த இந்தக்கோவில் தற்போது முழுமையான இடிபாடுகளில் உள்ளது. குர்ஜார் பிரதிஹர்களால் கட்டப்பட்டது. இஸ்லாமிய படையெடுப்பாளர்களால் இக்கோவில் அழிக்கப்பட்டுள்ளது.

காலம்

10-11 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)

அருகிலுள்ள பேருந்து நிலையம்

தோபோன்

அருகிலுள்ள இரயில் நிலையம்

பிப்ரைகான் நிலையம்

அருகிலுள்ள விமான நிலையம்

இராஜபோஜ்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top