Wednesday Dec 25, 2024

சிந்து பூந்துறை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், திருநெல்வேலி

முகவரி

சிந்து பூந்துறை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கோயில், சிந்து பூந்துறை, திருநெல்வேலி மாவட்டம் – 627006.

இறைவன்

இறைவன்: சுந்தரேசுவரர் இறைவி: மீனாட்சி

அறிமுகம்

திருநெல்வேலி மீனாட்சி சுந்தரேசுவரர் கோயில் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள தேவார வைப்புத்தலமாகும். திருநெல்வேலி மாவட்டத்தில் திருநெல்வேலி நகரில் பேருந்து நிலையம் அமைந்துள்ள பகுதி பூந்துறை என்றும் சிந்து பூந்துறை என்றும் அழைக்கப்படுகிறது. பேருந்து நிலையப் பகுதியில் உள்ள ஹோட்டல் ப்ளூ ஸ்டார் என்னும் ஓட்டலுக்கு எதிரில் உள்ள தெருவில் சென்று, முதல் இடப்பக்கம் திரும்பினால் இக்கோயில் உள்ளது. இக்கோயிலில் உள்ள இறைவன் சுந்தரேசுவரர் ஆவார். இறைவி மீனாட்சி ஆவார். இச்சிறிய கோயிலின் வெளிச்சுற்றில் விநாயகர், வள்ளி தெய்வானையுடன் சுப்பிரமணியர், சனீஸ்வரர், நவக்கிரகங்கள், நடராச சபை சன்னதிகள் உள்ளன. மூலவருக்குப் பக்கத்தில் இறைவி சன்னதி உள்ளது. இத்தலம் அப்பர் வாக்கில் இடம்பெற்றுள்ள பாண்டிய நாட்டு வைப்புத் தலமாகும்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஹோட்டல் ப்ளூ ஸ்டார்

அருகிலுள்ள இரயில் நிலையம்

திருநெல்வேலி

அருகிலுள்ள விமான நிலையம்

தூத்துக்குடி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top