சித்திரையூர் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில், திருவாரூர்
முகவரி :
சித்திரையூர் காசிவிஸ்வநாதர் சிவன்கோயில்,
சித்திரையூர், மன்னார்குடி வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610202.
இறைவன்:
காசிவிஸ்வநாதர்
இறைவி:
காசிவிசாலாட்சி
அறிமுகம்:
இவ்வூர் திருவாரூர் – திருத்துறைபூண்டி சாலையில் 10 கிமீ தூரத்தில் உள்ள மாவூர் பாலத்தை தாண்டி பாண்டவை ஆற்றின் வலது கரையில் 3 கிமீ தூரம் சென்றால் சித்திரையூர் அடையலாம். இங்கு ஒரு பெரிய குளத்தின் மேற்கு கரையில் உள்ளது சிவன் கோயில். இறைவன்- காசிவிஸ்வநாதர் இறைவி – காசிவிசாலாட்சி
கோயில் சிறியது தான், மூர்த்திகள் காசியில் இருந்து கொணரப்பட்டவை ஆகலாம். இறைவன் சிறிய லிங்க மூர்த்தியாக கிழக்கு நோக்கி கருவறை கொண்டுள்ளார் அவரது கருவறை வாயிலில் விநாயகர் வள்ளி தெய்வானை சமேத முருகனும் உள்ளனர்.
கருவறை கோட்டத்தில் தென்முகன், விஷ்ணு மற்றும் துர்க்கை உள்ளனர். சண்டேசர் வழமையான இடத்தில் உள்ளார். வடகிழக்கில் ஒரு மாடத்தில் பைரவர் உள்ளார்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சித்திரையூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி