சித்தாச்சல சமண குகை கோவில்கள், குவாலியர், மத்தியப் பிரதேசம்
முகவரி
சித்தாச்சல சமண குகை கோவில்கள், குவாலியர் கோட்டை, குவாலியர், மத்தியப் பிரதேசம் – 474 008.
இறைவன்
இறைவன்: ரிஷபானந்தார், ஆதிநாதார்
அறிமுகம்
கோவிலின் நுழையும் போது பார்க்கும் பிரம்மாண்டமான துவாரபாலகர்கள் போல கோட்டையின் சுவர்களில் இருபுறமும் பிரம்மாண்டமாக செதுக்கியிருக்கிறார்கள். சமண சமயத்தின் 24 தீர்த்தங்கரர்களுக்காக நிர்ணயிக்கப்பட்டுருக்கும் இந்த குடைவரை குகை கோவில்களின் கட்டுமானம் பொது யுகம் ஏழாம் நூற்றாண்டில் ஆரம்பிக்கப்பட்டு பதினைந்தாம் நூற்றாண்டு வரை தொடர்ந்திருக்கிறது. சிறியது பெரியது என மொத்தமா இருபத்தி ஆறு குகைகள் இங்க காணப்படுகின்றன. முகலாயர்கள் வலு பெற்று இந்த பகுதிகளை கைப்பற்றியதும் பெரும் சிற்பங்களையும் சிலைகளையும் விட்டு வைக்காம எல்லாவற்றையும் சிதைத்துவிட்டு சென்றிருக்கார்கள். குறிப்பாக பாபர் ஆட்சியில் இருந்த போது முடிந்த அளவு சேதப்படுத்திருக்கிறார்கள். காலத்தின் ஓட்டமும், முகலாயர்களின் வீழ்ச்சியும், முற்று பெற்று ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் பத்தொன்பதாம் நூற்றாண்டில் பராமரிக்கப்பட்டு சிதைவில் இருந்து ஓரளவு மீண்டுருந்தது. இங்கு ரிஷபானந்தா சிலையும் ஆதிநாதா சிலையும் சுமார் 58அடி உயரத்துல பிரம்மாண்டமாக செதுக்கியிருக்கிறார்கள். தற்போது இந்திய தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.
காலம்
7 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் (ASI)
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குவாலியர் கோட்டை
அருகிலுள்ள இரயில் நிலையம்
குவாலியர்
அருகிலுள்ள விமான நிலையம்
குவாலியர்