சிதம்பரம் நாகலிங்கேஸ்வரர் திருக்கோயில், கடலூர்
முகவரி
அருள்மிகு நாகலிங்கேஸ்வரர் திருக்கோயில், சிதம்பரம் நகரம், கடலூர் மாவட்டம்
இறைவன்
இறைவன்: நாகலிங்கேஸ்வரர்
அறிமுகம்
தில்லை பெருங்கோயிலை சுற்றி சிதம்பரம் நகரின் முப்பத்துஇரண்டு திக்குகளிலும் சிவன்கோயில்கள் இருந்தனவாம் பல லிங்க மூர்த்திகள் காலப்போக்கில் காணமல் போக எஞ்சியிருப்பவை சில, அப்படி இருந்த ஒன்று தான் இந்த நாகலிங்கேஸ்வரர் ( எனப்படுகிறது ) ஏனெனில் இக்கோயில் தெற்கு நோக்கி உள்ளது ஏன் என காரணம் அறியமுடியவில்லை. லிங்கமும் காமன் கோயில் லிங்கம் போல சிறிதாய் உள்ளது. லிங்கத்தை ஒட்டி ஒரு சிறிய விநாயகர் உள்ளார். கருவறையும் முகப்பு மண்டபமும் கொண்ட கோயில். மேலே இறைவனின் சுதை வேலைப்பாடுகள். தில்லை பெருங்கோயிலின் தெற்கில் உள்ள மன்னார்குடி தெருவின் மத்தியில் தெற்கு நோக்கி பிரியும் சிறிய தெருதான் செங்காட்டான் தெரு. இந்தத்தெருவில் தான் நந்தனார் குடில் உள்ளது. இந்த செங்காட்டான் தெருவின் நடுவில் இருந்து பிரியும் ஒரு குறுகிய சந்தில் தான் நாகலிங்கேஸ்வரர் உள்ளார். மிக குறுகலான சந்தில், கிடைத்த இடத்தில் இக்கோயில் கட்டப்பட்டிருக்கலாம். சிறிய லிங்கம் சிறிய விநாயகர். சிறிய கோயில் எப்படி இருந்தால் என்ன? இருப்பதை வழிபட செல்வோம். “அனைத்திற்கும் காரண காரியம் உண்டு”. ஆனால் காரணமும் காரியமும் யார் அறிவார்? #”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சிதம்பரம்
அருகிலுள்ள விமான நிலையம்
பாண்டிச்சேரி