சிங்கப்பூர் ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில்
முகவரி :
ஸ்ரீ லயன் சித்தி விநாயகர் கோயில்,
73, கியாங் சாயிக் சாலை,
சிங்கப்பூர், 089167.
தொலைப்பேசி : +65 – 6221 4853
இறைவன்:
விநாயகர்
அறிமுகம்:
சிங்கப்பூரின் கியாங் சாயிக் ரோடு பகுதியில் எளிமையும் அழகும் கைகோர்த்தாற் போன்று அமைக்கப்பட்டுள்ள ஆலயம், அருள்மிகு லயன் சித்தி விநாயகர் திருக்கோயிலாகும். சீனாடவுன் பகுதியின் மையப் பகுதியில் அமைந்துள்ள இக்கோயில் செட்டியார்கள் கோயில் சமூகத்தாரால் கட்டப்பட்டுள்ள மற்றொரு ஆலயமாகும். 1925-ம் ஆண்டு கட்டப்பட்ட இக்கோயில் மிக நீண்ட வரலாற்றை உடையது.
புராண முக்கியத்துவம் :
1920-ம் ஆண்டு மருத்துவமனை விரிவாக்கத்திற்காக சிங்கப்பூர் அரசு, நகரத்தாரிடம் இருந்து கோயில் நிலத்தை பெற்றனர். எனவே நகரத்தார்கள் தற்போதைய கோயில் நிலத்தை பெற்று மிக அதிகமான பொருட் செலவில் இக்கோயிலைக் கட்டினர். இப்புதிய கோயில் கட்டத் துவங்கிய நகரத்தார்கள், பழைய கோயிலில் சிதைவடைந்த நிலையில் இருந்த விநாயகர் சிலையை மருத்துவமனைக்கு அருகில்ஸ்தாபனம் செய்தனர். பின்னர் இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்ட கருங்கல்லால் ஆன விநாயகர் சிலையை ஆகம விதிப்படி ஸ்தாபித்தனர். பழைய சிலையை கருவறையில் உள்ள புதிய சிலைக்கு முன் பிரதிஷ்டை செய்தனர் .சிப்பாய் லயன் பகுதியில் அமைந்திருந்ததால், லயன் சித்தி விநாயகர் ஆலயம் என பெயரிட்டு முருகப் பெருமானின் அடையாளமான வேலையும் இக்கோயிலில் பிரதிஷ்டை செய்தனர்.
இந்த புதிய கோயில் கட்டப்பட்ட பின்னர் தைப்பூச விழாவிற்கு பிறகு சித்தி விநாயகர் கோயிலின் வெள்ளி ரத ஊர்வலம் நடத்தப்பட்டது. இந்த ஊர்வலம் டேங்க் ரோட்டில் துவங்கி மார்கெட் ரோடு வழியாக சித்தி விநாயகர் கோயிலை வந்தடைகிறது. டேங்க் ரோடு தண்டாயுதபாணி திருக்கோயிலின் அறங்காவலர் குழு உறுப்பினராக இருந்த பச்சையப்ப செட்டியார் இக்கோயிலுக்கு மேலும் ஒரு விநாயகர் சிலையை காணிக்கையாக வழங்கினார். இந்த மூன்றாவது விநாயகர் சிலை கோயிலின் மற்றொரு சன்னதியில் பிரதிஷ்டை செய்யப்பட்டது. கடைசியாக நகரத்தார்கள் 1973, 1989 மற்றும் 2007-ம் ஆகிய ஆண்டுகளில் இக்கோயிலின் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது.
மேலும் ஐந்து ராஜகோபுரங்களுடனான புதிய உள் பிரகாரங்களும் சுற்றுச் சுவர்களும் கட்டப்பட்டது. கருவறையை ஒட்டியுள்ள உள் பிரகாரம் மிக அமைதியாக, தியானம் செய்வதற்கு ஏற்றவாரு அமைக்கப்பட்டுள்ளது. விநாயகர் சதுர்த்தி விழா இக்கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. டேங்க் ரோடு அருள்மிகு தண்டாயுதபாணி கோயிலின் தைப்பூச விழாவின் போது சித்தி விநாயகர் கோயிலில் உள்ள புனித வேல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. தமிழ் புத்தாண்டு, தீபாவளி, திருக்கார்த்திகை, பொங்கல் போன்ற பண்டிகைகளின் போது இக்கோயிலில் சிறப்பு பூஜைகள் மற்றும் பிரார்த்தனைகள் நடத்தப்பட்ட பின்னரே தண்டாயுதபாணி கோயிலில் பூஜைகள் நடத்தப்படுகின்றன. வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பெரும்பாளான பக்தர்கள் பிரகாரத்தை 108 முறை வலம் வந்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்துகின்றனர். இக்கோயிலில் மூன்று விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது இதன் தனிச்சிறப்பாகும்.
காலம்
1925-ம் ஆண்டு
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கியாங் சாயிக் சாலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
கியாங் சாயிக் சாலை
அருகிலுள்ள விமான நிலையம்
சிங்கப்பூர்