சாமிநாதபுரம் சக்திபுரி இடைச்சீஸ்வரி கோயில்,
முகவரி :
சாமிநாதபுரம் சக்திபுரி இடைச்சீஸ்வரி கோயில்,
சாமிநாதபுரம்,
திண்டுக்கல் மாவட்டம் – 624618.
இறைவன்:
இடைச்சீஸ்வர்
இறைவி:
இடைச்சீஸ்வரி
அறிமுகம்:
பழனி – கோவை சாலையில் 18 கி.மீ. தொலைவில் வயலூருக்கு அடுத்த சாமிநாதபுரத்திலிருந்து 3 கி.மீ. தூரத்தில் இந்த சக்திபுரி உள்ளது. இங்குள்ள ஸ்ரீ சக்திபுரியில் அன்னை பராசக்தி ஸ்ரீ இடைத்தீஸ்வரி ஏன்னும் திருநாமத்துடன் விளங்குகிறாள். இந்த கோவிலின் வாயில் கதவுகளில் சூலங்கள் அமைந்து இருக்கின்றன. மிக நுண்ணிய கலை நுணுக்கத்துடன் அமைக்கப்பட்ட சிம்ம வாகனம் காணப்படுகிறது. அம்மன் இங்கு திரிசூலியாக நின்ற கோலத்தில் விஸ்வரூப தரிசனம் தருகின்றாள்.
புராண முக்கியத்துவம் :
காமகாசுரன் காமப்பித்து பிடித்து, பெண்களை இம்சித்தான். அம்பிகையின் மீதும் இச்சை கொண்டான். அமராவதி ஆற்றங்கரையில் இடைக்குலப் பெண்ணாக, இடைச்சீஸ்வரியாக அம்மன் உதயமானாள். அங்கு சென்று அன்னையின் கரத்தினை வலுக்கட்டாயமாக பற்ற முயற்சித்தான் அரக்கன். உடனே அன்னை விண்ணுக்கும் மண்ணுக்குமாக விஸ்வரூபம் எடுத்தாள். அவனது தலையைப் பிடித்துத் திருகி எறிந்தாள்.
அந்தத் தலை இடைச்சீஸ்வரி கோயிலின் அக்கினி மூலையில் போய் விழுந்தது. தலையில்லா உடல் கோயிலின் முன்புறம் விழுந்தது. வதம் செய்த பிறகு உக்கிரம் தணியாதிருந்த அன்னையை ஈசன், சாந்தப்படுத்தினார். இச்சா, கிரியா, ஞான சக்திகளின் சங்கமமாக வீற்றிருக்கிறாள் அன்னை.
நம்பிக்கைகள்:
பங்குனி மாதம் பௌர்ணமியன்று துளசி மாலை அணிந்து, மஞ்சள் சட்டை, சிவப்பு வேஷ்டி, பச்சை துண்டுடன், ஒரு மாதத்துக்கு அன்னைக்கு நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். குழந்தை பாக்கியம் பெற இந்த அன்னை ஆசியளிக்கிறாள்.
காலம்
500-1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
சாமிநாதபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திண்டுக்கல்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை