க்ரோல் கோ புத்த கோயில், கம்போடியா
முகவரி
க்ரோல் கோ புத்த கோயில், அங்கோர் தொல்பொருள் பூங்கா, க்ராங் சீம் ரீப் – 17000, கம்போடியா
இறைவன்
இறைவன்: அவலோகிதேஸ்வரர் (புத்தர்)
அறிமுகம்
சாலையில் இருந்து 100 மீட்டர் தொலைவில் நீன் பீனின் வடமேற்கில் க்ரோல் கோ அமைந்துள்ளது. இரண்டு செந்நிறக்களிமண் சுவர்களால் சூழப்பட்ட ஒற்றை மைய கோபுரத்துடன் அமைந்துள்ளது இந்த சிறிய கோயில். இது 12 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் – 13 ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் மன்னர் ஏழாம் ஜெயவர்மன், பெளத்த மதத்தில் பேயன் பாணி கலையைப் பின்பற்றி கட்டப்பட்டது. வெளியே நிற்கும் நிலையில் போதிசத்துவ அவலோகிதேஸ்வரர் பக்தர்களால் சூழப்பட்ட தாமரையின் மீது நிற்கும் சிற்பம் உள்ளது. க்ரோ கோ என்பது ஒரு ஒற்றை கோபுர நினைவுச்சின்னமாகும். உட்புற முற்றத்தின் இடதுபுறத்தில் மேற்கில் மணற்கல்லால் கட்டப்பட்ட ஒரு நூலகம் உள்ளது. இக்கோவில் முற்றிலும் சிதிலமடைந்து காட்சியளிக்கிறது. கோபுரங்கள் சிதைந்து கற்களால் அடுக்கியதுப்போல் உள்ளது.
காலம்
12 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
நீன் பீன்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீம் ரீப்
அருகிலுள்ள விமான நிலையம்
சீம் ரீப்