Wednesday Dec 18, 2024

கோவில் கோபுரம் கூட ஒழுங்காக தெரியாதபடி வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது!!

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு சென்று கோவிலின் வாசலில்…

இரண்டு தலைமுறையாய் பூக்கடை வைத்திருக்கும் கடைக்காரரிடமும்,

கோவிலின் எதிரில் மூன்று தலைமுறையாய் அல்வாக் கடை வைத்திருக்கும் கடைகாரரிடமும்,

கோவிலின் அருகில் அவரது தாத்தாவின் காலத்திலிருந்தேப் பழக்கடை வைத்திருக்கும் கடைக்காரரிடம்…

மேலும் கோவிலின் வாசலில் கடை வைத்திருக்கும் சில வியாபாரிகளிடமும்…

கோவிலின் உள்ளே வேலைசெய்யும் அறநிலைத்துறை அதிகாரியிடமும்… ,

கோவிலின் உள்ளே சுற்றித்திரியும் சில பூசாரிகளிடமும்…

நாம் கேட்ட ஒரே ஒரு கேள்வி இந்த கோவிலைக் கட்டியது யார்.?

இந்தக் கேள்விக்கு எவரிடமும்  பதிலில்லை என்பதுதான் மிக கேவளமான உண்மை..

அப்படியென்றால் கோவிலின் வரலாற்றை அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்லவில்லை என்பது மிக தெளிவாக தெரிகிறது..

சரி வரலாறு தான் இந்த லெட்சணத்தில் இருக்கிறது.. என்று நினைத்தால்

கோவிலுக்கான மதிப்பு அதைவிட மோசமாக காணப்படுகிறது..கோவிலை சுற்றிலும் ஆக்கிரமிப்பு கோவில் கோபுரம் கூட ஒழுங்காக தெரியாதபடி வியாபாரிகளால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது..

ஆசியாவிலே இரண்டாவது மிகப்பெரிய சிவன் கோவில் நெல்லையப்பர் கோவில்

கோவிலின் உள்ளே பல கட்டுமான அதிசயங்களை கொண்ட ஒரு கோவில் ஆச்சரியப்பட வைக்கும் சிற்ப வேலைப்பாடுகளை கொண்ட ஒரு கோவிலின் வெளித்தோற்றம் ஆக்கிரமிப்புகளால் சூழப்பட்டுள்ளது..

 (பல்லவ மன்னர்களால் கட்டுமானம் தொடங்கப்பட்டு கடைசியாக நின்ற சீர் நெடுமாறப் பாண்டிய மன்னனால் கிபி ஏழாம் நூற்றாண்டில் கட்டி முடிக்கப்பட்டது)

அந்த நின்ற சீர் நெடுமாறப்பாண்டியனுக்கு நாம் வைத்த அடையாளம் என்ன..?

ஒரு பேருந்து நிலையத்திற்கு அவரது பெயரை வைத்தோமா?  இல்லை

 பாடப்புத்தகத்திலாவது அவரது பெயரை பதிவிட்டோமா? இல்லை

 அவருக்கு ஒரு சிலை தான் வைத்தோமா.. ? இங்கு சிலையாக நிற்பதெல்லாம் எம்ஜிஆர்,அண்ணா, பெரியார், கலைஞர்,அம்மா,மற்றும் பலர்..

கண்ணகி என்ற ஒற்றைப் பெண்மணியை வைத்து  ஒட்டு மொத்த நம் பாண்டிய மன்னர்களின் புகழையும் அவர்களது பெயரையும் வரலாற்றிலிருந்தே அழித்துவிட்டார்கள்..

கோவலனுக்குத் தவறான நீதியை தான் வழங்கிவிட்டதால் தன் உயிரையே மாய்த்துக் கொண்டவன்..நெடுஞ்செழியப் பாண்டியன்.. எப்பேர்ப்பட்ட உத்தமனாக இருந்தால்,தான் வழங்கிய தவறான நீதிக்காக தன் உயிரையே விட்டிருப்பான்..?

அந்த நெடுஞ்செழியப் பாண்டியனுக்கு ஒரு டையாளமோ,பாடப்புத்தகத்தில்,அவரின் சாதனைகளைப் பற்றியோ ஒன்றுமேக் கிடையாது..

இந்தியாவிலே சிறந்த நீர் மேலாண்மை கொண்ட ஒரு மாவட்டம் என்றால் அது திருநெல்வேலி தான்.. மூன்று கிராமத்திற்கு ஒரு குளம் இருந்தது திருநெல்வேலி மாவட்டத்தில் மட்டும் தான்..

நெல்லையப்பர் கோவிலைக் கட்டியநின்ற சீர் நெடுமாறப் பாண்டிய மன்னனின் ஆட்சிகாலத்தில் ஆறுகள் பல்வேறு கிளைநதிகளாகப் பிரிக்கப்பட்டு..பாசனப்பகுதி பெருகி காணப்பட்டது..

அப்படி திருநெல்வேலி மாவட்டத்தையே செழிப்படைய செய்த மன்னன்.. அந்த நின்ற சீர் நெடுமாறப்பாண்டியன்..

அவர் கட்டி வைத்த அந்த நெல்லயப்பர் கோவிலை கூட அவர் பெயரை‌ சொல்லும்படியாக நாம் பாதுகாக்கவில்லை..

நாம் அனைவரும் மத்சசார்பின்மை பேசி,நடுநிலை பேசி ஆளுக்கு ஒரு ஊழல் அரசியல் கட்சிகளில் இருந்து, நம் அடையாளங்களை நாமே அழித்து கொண்டு இருக்கிறோம்…

ஆபத்தை உணர்ந்து விழிப்புணர்வு பெறுங்கள் அரசியல் கட்சிகளை கடந்து சாதி பிரிவுகளை கடந்து தமிழனாய் ஒன்றினையுங்கள்

உங்கள் பகுதியில் உங்கள் கோயிலை காப்பாற்றுங்கள்

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top