கொல்லாபுரம் அபராத ரட்சகர் சிவன்கோயில்
முகவரி
கொல்லாபுரம் அபராத ரட்சகர் சிவன்கோயில், உடையார்பாளையம் வட்டம், அரியலூர் மாவட்டம்
இறைவன்
இறைவன்: அபராத ரட்சகர், இறைவி: அபிராமி
அறிமுகம்
பிற்காலச் சோழர்களுக்குத் தலைநகராக விளங்கிய கங்கைகொண்டசோழபுரத்தின் பகுதிகளே, இன்றுள்ள உட்கோட்டை, மாளிகைமேடு, ஆயிரக்கலம், வாணதரையன் குப்பம், செங்கமேடு கொல்லாபுரம், கங்கவடங்க நல்லூர் வீரசோழ நல்லூர், மெய்க்காவல்புத்தூர், சுண்ணாம்புக்குழி, குருகைகாவலப்பன் கோயில் முதலிய சிற்றூர்கள் ஆகும். க.கொ.சோ.புரத்தின் கிழக்கில் தேசிய நெடுஞ்சாலை NH36 – ஐ தாண்டி கிழக்கில் இரண்டு கிமி சென்றால் கொல்லாபுரம் அடையலாம். கொல்லர்கள்புரம் என்பதே கொல்லாபுரம் ஆகியிருக்கலாம். பெரிய ஏரியின் கரையில் அமைந்துள்ள கொல்லாபுரம் கிராமத்தில் சோழ மன்னர்கள் காலத்தில் உருவாக்கப்பட்ட அபராத ரட்சகர்- அபிராமி திருக்கோயில் அமைந்துள்ளது. சோழர்களின் பொன்னும், பொருளும், உழைப்பும், ரத்தமும், வியர்வையும் சிந்தி கட்டிய கோயில். ஆனால் இன்றோ கோயில் பராமரிப்பு இன்றி செடிகள் கொடிகள் முட்புதர்கள் அடர்ந்த நிலையில் உள்ளது கருங்கல்லால் எழுப்பப்பட்ட கோயில் தான் என்றாலும், ஆயிரம் ஆண்டுகள் கடந்த நிலையில் , பராமரிப்பில்லாமல் கோயில் ஆங்காங்கே விரிசல் விழ ஆரம்பித்துள்ளது. பூஜைகளும் முறையாக இல்லை, பிரகார கோயில்களும் இல்லாமல் போனது, கருவறை கோட்டங்களும் காலியாக உள்ளன. இறைவன் அபராத ரட்சகர் கிழக்கு நோக்கியும், இறைவி அபிராமி தெற்கு நோக்கியும் கோயில் கொண்டுள்ளனர். இறைவன் கருவறை வாயிலில் விநாயகர் முருகன் உள்ளனர். இரு கருவறைகளையும் ஒரு செங்கல் முகப்புமண்டபம் இணைக்கிறது.. அவற்றிலும் விரிசல்கள், வாயில்படியே உடைந்து கிடக்கிறது. மண்டபங்களில் விழ்ந்த விதைகள், செடிகளாகி மரங்களாகி நிற்கின்றன. வேலியே பயிரை மேய்ந்தது போல் அரசாங்கமும் தன் பங்கிற்கு தென்புறம் கோயிலை மறைத்தவாறு பெரிய மேல்நிலைப்பள்ளியை கட்டிவைத்துள்ளது. கோயிலின் முகப்பு பகுதியில் ரேஷன் கடை, ஊராட்சி மன்றம், சுகாதார கட்டிடம், துவக்கப்பள்ளியும் கட்டி ஆக்கிரமித்துள்ளது. அதுவும் போதாதென்று ஒரு தண்ணி டாங்கி ஒன்ற்றையும் கட்டி வைத்துள்ளது. “ஆற்ற அருநோய் மிகு அவனி மழையின்றிப் போற்றரும் மன்னரும் போர்வலி குன்னுவர் கூற்றுதைத்தான் திருக்கோயில்கள் ஆனவை சாற்றிய பூசைகள் தப்பிடில் தானே! முன்னவனார் கோயில் பூசைகள் மூட்டிடின் மன்னர்க்குத் தீங்குள மாரிவளம் குன்னும் கன்னங்களவு மிகுந்திடும் காசினியில் என்னரு நந்தி எடுத்துரைத்தானே- திருமூலர்” வேற மதத்துக்காரன் இடத்தில் இப்படி கேட்டுகேள்வி இல்லாம காலை வைக்கமுடியுமா இந்த அரசாங்கத்தால்? இதெயெல்லாம் கேட்க வேண்டிய, ஆயிரம் மக்கள் தொகை கொண்ட இவ்வூர் மக்களும் இதனை பெரிதாக கொள்ளவில்லை இந்துக்களே இது நம்ம சொத்து, நம்ம பெருமை, நம்ம பண்பாட்டு மையம் பல நாடுகளை வென்ற சோழனின் மண் இது, இதனை ஆக்கிரமிப்பது அரசாக இருந்தாலும், இதை எதிர்த்து இப்போது கேள்வி கேட்கவில்லை என்றால் இனி எப்போதும் கேட்கமுடியாது இதற்கெல்லாமா செம்பியன் மாதேவி பிறப்பெடுத்து வரமுடியும்?? சிந்தியுங்கள் # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
–
அருகிலுள்ள பேருந்து நிலையம்
உடையார்பாளையம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
அரியலூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி