கொரடாச்சேரி காளிகாபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், திருவாரூர்
முகவரி
அருள்மிகு காளிகாபரமேஸ்வரி அம்மன் திருக்கோயில், கொரடாச்சேரி பிள்ளைத்தெரு, கொரடாச்சேரி அஞ்சல், குடவாசல் தாலுகா, திருவாரூர் -613703. போன்: +91 94434-75587
இறைவன்
இறைவி: காளிகாபரமேஸ்வரி அம்மன்
அறிமுகம்
காளிகா பரமேஸ்வரி கோயில் என்பது தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள கொரடாச்சேரியில் அமைந்துள்ள சிவபெருமானின் மனைவி பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். ஸ்தல விருட்சம் என்பது வேம்பு, தீர்த்தம் என்பது திருக்குளம். இக்கோயில் கல்லுளி மாரியம்மன் கோயிலுக்கு வடக்கே உள்ளது.
புராண முக்கியத்துவம்
அப்பகுதி செல்வந்தர் முயற்சியால் கோயில் உருவாகியது. கல்லுளி மன்னன் வட நாட்டிற்கு போர் தொடுக்க செல்லும் போது வழிபட்ட கல்லுளி மாரியம்மன் கோயிலுக்கும் வடக்கில் கோயில் உள்ளது. மிகவும் பழமை வாய்ந்தக்கோயில். மூன்றுபக்கம் நீரோட்டம் உள்ள பகுதியில் கோயில் கொண்ட காளிகாம்பாள் அப்பகுதி செல்வந்தர் கனவில் தோன்றி காவல் தெய்வமான நான் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் வருகிறேன். எனக்கு கோயில் கட்டி வழிபட்டால் அப்பகுதி மக்கள் நலன் காக்கும் காவல்தெய்வமாக விளங்குவதாக தெரிவித்துள்ளார். அதன் பின் சிறு கொட்டகை அமைத்துள்ளார். பிள்ளை வம்சத்தினர்கள் குலதெய்வமாக கருதி வழிபாடு நடத்தினர். அதன் பின் அந்த வம்சத்தினர்கள் சேர்ந்து கோயில் கட்டி கும்பாபிஷேகம் நடத்தி கிராம கோயிலாக பராமரித்து வருகின்றனர். பல்வேறுப்பகுதியில் இருந்து குலதெய்வ வழிபாட்டிற்கு வந்து செல்கின்றனர்.
நம்பிக்கைகள்
திருமணத்தடை, புத்திரபாக்கியம், நினைத்த காரியம் கைகூடும் பரிகார ஸ்தலமாக உள்ளதால் பக்தர்கள் வந்து பிரார்த்திக்கின்றனர்.
சிறப்பு அம்சங்கள்
சோழர் காலத்திற்கு முன் மாரியம்மன் குல தெய்வ வழிபாடு நடந்துள்ளது. அப்போது அம்மை போட்டவர்களுக்கு இந்த கோயிலில் வழிபாடு நடத்தி தண்ணீர் கொடுத்தால் அம்மை குணமடையும் என்பதால் அங்கிருந்து வேப்பிலை மற்றும் தண்ணீர் கொடுத்தனுப்பவது வழக்கமாக இருந்துள்ளது. வடக்குப்பக்கம் வாயிலில் கற்பகிரகத்தில் ஒரு கலசம் அமைக்கப்பட்டுள்ளது. மகா மண்டபத்தில் 500 பேர் அமர்ந்து தரிசனம் செய்யலாம், மகா மண்டபத்தில் அஷ்ட லட்சுமிகள் தனலட்சுமி, தானிய லட்சுமி, கஜலட்சுமி, சந்தான லட்சுமி, ஆதிலட்சுமி, வீரலவீ ட்சுமி, ஐஸ்வர்ய லட்சுமி, விஜயலட்சுமி சிற்பம் கலை நுணக்கத்துடன் அமைக்கப்பட்டுள்ளது.
திருவிழாக்கள்
சித்திரை திருவிழா, சாரதா நவராத்திரி விழா 16 நாள் உற்சவம் (புரட்டாசி அமாவாசை முதல் பவுர்ணமி வரை) விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.
காலம்
500 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொரடாச்சேரி, நீடாமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
கொரடாச்சேரி, நீடாமங்கலம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி