கொத்தமங்கலம் பைரவர் கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
கொத்தமங்கலம் பைரவர் கோயில்
கொத்தமங்கலம், நாகை வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம் – 609703.
இறைவன்:
பைரவர்
அறிமுகம்:
திருமலைராயன்பட்டினம் – திட்டச்சேரி இடையில் உள்ளது அகரகொந்தகை பேருந்து நிறுத்தம், இங்கிருந்து வடக்கில் ஒரு கிமீ தூரத்தில் அகரகொந்தகையும், அடுத்த ஒரு கிமீ தூரத்தில் கொத்தமங்கலம் ஊரும் உள்ளது. இவ்வூரின் வடக்கில் ஓடும் அரசலாற்றில் இருந்து ஒரு சிறிய ஓடை பிரிந்து வருகிறது, அதன் கரையில் உள்ளது இந்த பைரவர் கோயில், மன்னன் திருமலைராயன் கட்டிய 108 கோயில்களில் கொத்தமங்கலம் பகுதியில் சில கோயில்கள் இருந்தன அவற்றில் இருந்த ஒரு பைரவருக்கு தனித்த கோயில் ஒன்றை மக்கள் கட்டியுள்ளனர். ஓடைக்கரையில் பெரியதொரு அரசமரம், அதன் கீழ் இரண்டு சென்ட் அளவில் மேற்கு நோக்கிய பைரவர் கோயில் கொண்டுள்ளார், அவரின் முன்னம் ஒரு மண்டபம் அமைந்துள்ளது. இப்பகுதி மக்களின் இஷ்ட தெய்வமாக பைரவர் இருக்கின்றார்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கொத்தமங்கலம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி