குளித்தலை நீலமேகப்பெருமாள் திருக்கோயில், கரூர்
முகவரி :
அருள்மிக நீலமேகப் பெருமாள் திருக்கோயில்,
குளித்தலை,குளித்தலை போஸ்ட்,
கரூர் மாவட்டம் – 639104.
போன்: +91 94438 36500, 04323 224 222
இறைவன்:
நீலமேகப் பெருமாள்
இறைவி:
கமலநாயகி
அறிமுகம்:
கரூர் மாவட்டம், குளித்தலையில் பிரசித்தி பெற்ற நீலமேகப்பெருமாள் கோவில் உள்ளது. கரூர் பேருந்து நிலையத்திலிருந்து 43 கி.மீ குளித்திலையில் இருந்து 4 கி.மீ தொலைவில் இக்கோவில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம் :
ஸ்ரீரங்கத்திலிருந்து காவிரி தென்கரையில் 45கிமீ தூரம் கடம்பந்துறை அருகில் திருச்சிச் கரூர் சாலையில் உள்ளது. 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த பராக்கிரம பாண்டியன் மகன் வீரபாண்டியன் திருப்பணி செய்தது. மகேந்திரவர்மனும், முதலாம் நரசிம்ம பல்லவனும் திருப்பணி செய்துள்ளார்கள். ஸ்ரீரங்கத்தைப் போல் 7 மதில் சுவர்கள் அமைந்திருந்த கோயில். அனந்தாழ்வான் என்கிற பக்தர் இக்கோயில் மற்றும் திருப்புல்லாணி கோயில் கட்டமைப்புகளுக்கு 18ம் நூற்றாண்டில் உதவியதாக செய்தி.
நம்பிக்கைகள்:
திருமணத்தடை நீங்க வேண்டிக்கொள்கின்றனர்
சிறப்பு அம்சங்கள்:
கோயிலுக்குள் கால் வைத்தவுடன் குளிர்ந்த காற்று நம் உடம்பை தொட்டுச் செல்லும். அதற்கு காரணம் ராஜ கோபுர வாயிலை அடைந்தவுடன் கொடிமரம் அருகே நந்தவனம் பூத்துக்குலுங்குகிறது. அதற்கு எதிரே வைகுண்ட ஏகாதசி மண்டபம். உள்ளே நுழைந்ததும் அழகே வடிவான நீலமேகப்பெருமாளை ஸ்ரீதேவி, பூதேவியுடன் கூடிய கல்யாணகோலத்தில் காணலாம். அருகே கமலநாயகி தாயார் அமர்ந்த கோலத்தில் உள்ளார். உட்பிரகாரத்தை சுற்றி வரும்போது ஆண்டாளையும் தரிசிக்கலாம்.
திருவிழாக்கள்:
ராமநவமி, கிருஷ்ணஜெயந்தி, அனுமன் ஜெயந்தி, வைகுண்ட ஏகாதசி
காலம்
1300 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குளித்தலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
குளித்தலை
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி