குருசாமிபாளையம் சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், நாமக்கல்
முகவரி
அருள்மிகு சிவசுப்ரமணியசுவாமி திருக்கோயில், குருசாமிபாளையம், நாமக்கல் மாவட்டம் – 637403.
இறைவன்
இறைவன்: சிவசுப்ரமணிய சுவாமி இறைவி: வள்ளி, தெய்வான
அறிமுகம்
தமிழ்நாட்டின் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள குருசாமி பாளையத்தில் அமைந்துள்ள சிவசுப்ரமணிய சுவாமி கோயில், முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இக்கோயில் முருகப்பெருமானின் தளபதியான வீரபாகுவால் வழிபடப்பட்டது. கோவிலில் உள்ள இரண்டு பிரதான தெய்வங்களை (பாலசுப்ரமணியன் மற்றும் தண்டாயுதபாணி) வணங்குவதன் மூலம் பக்தருக்கு நன்மை கிடைக்கிறது. ராசிபுரத்தில் இருந்து திருச்செங்கோடு செல்லும் வழியில் 10 கிலோமீட்டர் தொலைவில் குருசாமி பாளையம் என்ற இடத்தில் இக்கோயில் அமைந்துள்ளது.
புராண முக்கியத்துவம்
முருகக் கடவுளின் படை வீரர்களின் தளபதியாகத் திகழ்ந்த வீரபாகு. இங்கே பாலதண்டாயுதபாணியின் திருவிக்கிரகத்தை வைத்து, மனமுருகி வழிபட்டார்; இதில் மகிழ்ந்த முருகப்பெருமான், அவருக்கு இங்கு திருக்காட்சி தந்தார் என்று தெரிவிக்கிறது ஸ்தல புராணம். பிறகு, வீரபாகுவின் வம்சத்தவர்கள், முருகப்பெருமான் தரிசனம் தந்த இடத்தில் சிறியதொரு கோயிலை அமைத்து வழிபடத் துவங்கினர்.
நம்பிக்கைகள்
ஒன்பது வெள்ளிக்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமைகளில், இங்கு வந்து நெய்தீபமேற்றி, சிவசுப்ரமணியரை வழிபட்டால், செவ்வாய் தோஷம் நீங்கும்; திருமண பாக்கியம் கைகூடும்; வயிறு சம்பந்தமான பிரச்சனைகள் யாவும் விலகும் என நம்புகின்றனர் பக்தர்கள்.
சிறப்பு அம்சங்கள்
இந்தத் தலத்தில், சிவசுப்ரமணிய ஸ்வாமி மற்றும் பாலதண்டாயுதபாணி என இரண்டு முருகப்பெருமான்களை தரிசிக்கலாம். பங்குனி உத்திரத்தின் போது, முருகப் பெருமானுக்குத் திருக்கல்யாண வைபவம் நடைபெறும். அப்போது, தங்கள் கையால் மாலை தொடுத்து, சுவாமிக்கு சார்த்தி வழிபட… விரைவில் கல்யாண மாலை நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை. இங்கு வந்து பொங்கலிட்டு, அன்னதானம் செய்து வழிபட்டால் அந்த வருடம் விளைச்சல் அமோகமாக இருக்கும்; சந்ததி செழிக்கும் என்பது ஐதீகம்.
திருவிழாக்கள்
பங்குனி உத்திரம், ஆடிக் கிருத்திகை, வைகாசி விசாகம், மாசி மகம், சித்ரா பவுர்ணமி, திருக்கார்த்திகை தீபம்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத் துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குருசாமிபாளையம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சேலம், கரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
கோயம்பத்தூர்
0