குமாரநத்தம் சிவன்கோயில், மயிலாடுதுறை
முகவரி :
குமாரநத்தம் சிவன்கோயில்,
குமாரநத்தம், சீர்காழி வட்டம்,
மயிலாடுதுறை மாவட்டம் – 609117.
இறைவன்:
சிவன்
அறிமுகம்:
சீர்காழியின் மேற்கில் செல்லும் புறவழி சாலையில் இருந்து ஒரு சிறிய சாலை மேற்கில் செல்கிறது அது தான் பனமங்கலம் செல்லும் சாலை, ஊருக்குள் சென்றதும் ஒரு இருப்புபாதையை கடக்கின்றோம், கடந்தவுடன் ஒரு சித்தி விநாயகர் கோயில் உள்ளது இதன் இடது மற்றும் வலதுபுறம் இரு சிறிய வழிகள் செல்கின்றன. இரு வழியுமே கடினமாது தான் இக்கோயில் சரியான செல்லும் வழி இன்றி உப்பனாற்றின் தென் கரையில் உள்ளது அதனால் பனமங்கலம் விநாயகர் கோயிலின் வலதுபுறம் சிறியமண் சாலை வழி செல்வோம். இந்த வழி பனமங்கலத்தின் இடுகாட்டு பாதை தான் இதன் வழி சென்று உப்பனாற்றின் தென்கரை மேல் நடந்து சென்று இக்கோயிலை அடையவேண்டும். சிரமமான வழி தான். சுடுகாடு வரை ஓரளவு நன்றாக நடந்து செல்ல முடியும், அதன் பின்னர் ஆற்றின் கரை மழையில் கரைந்து அறுத்தோடி போய் புல்லும் புதருமாக உள்ளது. அதனால் கரையில் இருந்து ஆற்றின் உள்புறம் இறங்கி ஓரளவு சம தரையாக இருக்கும் பகுதியில் நடந்து அரை கிமீ தூரம் சென்றால் கரையை ஒட்டி இந்த இடிந்து போன சிவன்கோயிலை காணமுடியும்.
கரையை ஒட்டி கிழக்கு நோக்கிய ஒரு சிவன்கோயில் ஒன்று விமானம் பாதி இடிந்து விழுந்தும் இன்னும் நிற்கிறது. கருவறையில் இறைவன் அழகிய பெரிய வடிவில் உள்ளார் பாதி புதைந்த நிலையில் உள்ளார். சமீப மாதங்களில் சேலத்து அன்பர்கள் இவருக்கு ஒரு நந்தியை கொண்டு வந்து வைத்து பிரதோஷம் செய்ய ஆரம்பித்து உள்ளனர். திருப்பணியை எந்த ஊரார் முன்னின்று செய்வது, என்பதும் ஒரு குழப்பம், தருமை ஆதீனத்தை அணுகலாம் என்று சிலரும், நமக்கேன் என சிலரும் தாக்கம் காட்டிவருவது தெரிகிறது. பழைய உப்பனாறு செல்லும்போது இக்கோயில் துறையூர் எல்லையில் இருந்தது, உப்பனாற்றை இடமாற்றம் செய்தபோது இக்கோயில் குமாரநத்தம் எல்லைக்குள் வந்துள்ளது. பனமங்கலம் ஊராரும் இதற்க்கு சொந்தம் கொண்டாடுகின்றனர்.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
குமாரநத்தம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி