Wednesday Dec 18, 2024

குன்னியூர் காமாட்சி அம்மன் திருக்கோயில், திருவாரூர்

முகவரி

அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மன்னார்குடி, குன்னியூர், திருவாரூர் மாவட்டம் – 614717. தொலைபேசி: +91 93813 30019

இறைவன்

இறைவி: காமாட்சி அம்மன்

அறிமுகம்

தமிழ்நாட்டின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள குன்னியூர் கிராமத்தில் அமைந்துள்ள காமாட்சி அம்மன் கோயில், பார்வதி தேவிக்காக அர்ப்பணிக்கப்பட்ட கோயிலாகும். இக்கோயில் 200 ஆண்டுகள் பழமையானது என நம்பப்படுகிறது. சுயம்பு விக்ரஹம் முதலில் சீதலா பரமேஸ்வரி என்ற பெயரால் அறியப்பட்டது, ஆனால் பின்னர் காமாக்ஷி என்று போற்றப்பட்டது. மன்னார்குடிக்கு கிழக்கே மதுவன க்ஷேத்திரம் என்றும், அகஸ்திய நதிக்கு வடக்கே என்றும், ஹரிசந்திரா நதிக்கு தெற்கே கன்னிபுரி என்றும் ஒரு கிராமம் உள்ளது. தற்போது குன்னிபுரி / குன்னியூர் என்று அழைக்கப்படுகிறது.

புராண முக்கியத்துவம்

மதுவன சேத்திரம் என்று அழைக்கப்படும் மன்னார்குடி நகரின் கீழ்திசையில் அகஸ்திய நதியின் வடக்கிலும், அரிச்சந்திரா நதியின் தெற்கிலும் கன்னிபுரி என்ற கிராமம் இருக்கிறது. இப்போது இவ்வூர் குன்னியூர் எனப்படுகிறது. இங்கே “சீதளா பரமேஸ்வரி’ என்ற பெயரில் காமாட்சியம்மன் குடிகொண்டிருக்கிறாள். “காம’ என்ற சொல்லுக்கு “அன்பு’ எனப் பொருள். “அக்ஷி’ என்ற சொல்லுக்கு கண் என்று பொருள். “அன்பு பொங்கும் கண்ணை உடையவள்’ என்று காமாட்சிக்கு பொருள் கொள்ளலாம். மற்றொரு பொருளின் படி “கா’ என்ற எழுத்திற்கு “சரஸ்வதி’ எனப் பொருள். “மா’ என்ற சொல்லுக்கு “மகாலட்சுமி’ என்று பொருள். இருவரையும் தங்கள் கண்களாக கொண்டவள் காமாட்சி. இது மகா பெரியவாளான சங்கராச்சாரியார் வாக்கு. இந்த கோயிலில் உள்ள காமாட்சி விக்ரகம் மிகவும் சிறியது. 200 ஆண்டுகளுக்கு முன் சுயம்புவாக தோன்றியது. இங்கு அம்மன் வலது காலை மடித்து, இடது காலை தொங்கவிட்டு அமர்ந்த நிலையில் காட்சி தருகிறாள். ஆரம்பத்தில் கீற்றுக் கொட்டகையே இருந்தது. பின்பு பெரிய கோயிலாக கட்டப்பட்டது.

நம்பிக்கைகள்

திருமணத்தடை, குழந்தை பாக்கியம், கல்வியில் சிறந்து விளங்க இறைவனை பிரார்த்திக்கலாம்.

சிறப்பு அம்சங்கள்

இங்குள்ள அம்மன் பூமியில் இருந்த தானாக தோன்றியவள் என்பதால், மக்கள் கோயில் அருகே செல்லும் போது வேகமாக அதிர்ந்து நடக்க மாட்டார்கள். மிகமிக மெதுவாக அடிப்பிரதட்சணம் போல அடியெடுத்து வைத்து கடந்து செல்வார்கள். பச்சை போடுதல்: “பச்சை போடுதல்’ என்பது இங்கு பெரிய பிரார்த்தனை. அதாவது, யாராவது ஒருவர் வீட்டில் சுபகாரியம் நடந்தால் அம்பாளுக்கு அதிகாலையில் விசேஷ அபிஷேகம், லலிதா சகஸ்ர நாமபூஜை நடக்கும். இரவில் அம்பாளை படிச்சட்டத்தில் வைத்து அலங்காரத்துடன் சுபகாரியம் நடக்கும் வீட்டிற்கு எடுத்து வருவார்கள். அம்பாளின் முன்பு ஆறு மரக்கால் அரிசியை பரப்பி தேங்காய், பழவகைகள், காய்கறிகள் வெற்றிலை, பாக்கு பூ வைத்து நைய்வேத்தியம் செய்வார்கள். கிராம தேவதை காத்தவராயனின் பிரதிநிதியாக கோயில் பூசாரி சுக்குமாந்தடி எனப்படும் மரக்கட்டை ஒன்றை எடுத்து வருவார். இது அனுமானின் கையில் உள்ள கதாயுதம் போல தலைபாகம் உருண்டையாக செய்யப்பட்டிருக்கும். இந்த மரக்கட்டைக்கும் பழம், பூ, வேப்பிலை கொத்து, இளநீர், தென்னம்பாளை குருத்து, சுருட்டு, புகையிலை ஆகியவை படைக்கப்படும். இதற்கு “பள்ளயம் போடுதல்’ என்று பெயர். இதன் பிறகு உடுக்கு அடிக்கப்பட்டு அருள்வாக்கு சொல்லப்படும். தற்போது வீடுகளுக்கு அம்மன் வருவது நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு பதிலாக சுபகாரிய வீட்டார் கோயிலுக்குச் சென்று பச்சை போடுதல் நிகழ்ச்சியை நடத்துகின்றனர். இந்த நிகழ்ச்சியின் மூலம் நினைத்த காரியம் நடக்கவும், எதிர்காலத்தை திட்டமிட்டுக் கொள்ளவும் வசதியாக இருக்கிறது.

திருவிழாக்கள்

சித்திரை மாதத்தில் இங்கு தீமிதி விழா நடக்கிறது. அம்மனை குடத்து நீரில் ஆவாஹனம் செய்து அந்த குடத்தை தலையில் சுமந்து கொண்டு பூசாரியும், பக்தர்களும் தீயின் மீது நடப்பார்கள்.

காலம்

200 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

சத்திரக்குடி

அருகிலுள்ள இரயில் நிலையம்

மன்னார்குடி

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top