கிழக்கு மெபான் சிவன் கோயில், கம்போடியா
முகவரி
கிழக்கு மெபான் சிவன் கோயில், க்ராங் சீம் ரீப், கம்போடியா
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
கிழக்கு மெபான், கம்போடியாவின் அங்கோரில் 10 ஆம் நூற்றாண்டு கோயில் ஆகும். இராஜேந்திரவர்மன் மன்னனின் ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட இக்கோயில், செயற்கைத் தீவான கிழக்கு பாரே நீர்த்தேக்கத்தின் மையத்தில் தற்போது வறண்ட நிலையில் உள்ளது. கிழக்கு மெபான் சிவனுக்கு அர்ப்பணிக்கப்பட்டது மற்றும் மன்னரின் பெற்றோரையும் கெளரவிக்கிறது. இக்கோவில் இராஜேந்திரவர்மனின் ஆட்சியின் மற்றொரு படைப்பாகும். கிழக்கு மெபானில் உள்ள சிற்பம் மாறுபட்டது. இதில் முதல் மற்றும் இரண்டாம் அடுக்குகளின் மூலைகளில் இரண்டு மீட்டர் உயரமுள்ள நிற்கும் கல் யானைகள் உள்ளன. இந்திரன் கடவுள் தனது மூன்று தலை யானை ஐராவதாவின் மேலுள்ளதுப்போலும், சிவன் அவரது மேருமலையில் உள்ளதுப்போலவும், புனித நந்தி ஆகியவையும் அழகாக செதுக்கப்பட்டுள்ளது. சன்னல்களின் செதுக்கல்கள் குறிப்பாக நேர்த்தியானது. ப்ரீ ரூபின் பொது பாணியில் கட்டப்பட்ட கிழக்கு மெபான் கி.பி 953 இல் அர்ப்பணிக்கப்பட்டது. கோயில் முற்றிலும் இடிந்து சிதிலமடைந்து கிடக்கிறது.
காலம்
10 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளம்
அருகிலுள்ள பேருந்து நிலையம்
க்ராங் சீம் ரீப்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீம் ரீப்
அருகிலுள்ள விமான நிலையம்
சீம் ரீப்