கிள்ளியநல்லூர் சிவன் கோயில், திருச்சி
முகவரி
கிள்ளியநல்லூர் சிவன் கோயில், திருச்செங்கோடு – நாமக்கல் – திருச்சி சாலை, கிள்ளியநல்லூர், தமிழ்நாடு 621213
இறைவன்
இறைவன்: சிவன்
அறிமுகம்
ஸ்ரீ கிள்ளியநல்லூர் சிவன் கோயில் திருச்செங்கோடு – நாமக்கல் – திருச்சி சாலை, கிள்ளியநல்லூர், தமிழ்நாடு என்னும் இடத்தில் உள்ளது. கோயில் முற்றிலும் பாழடைந்த நிலையில் உள்ளது. கோவிலில் உள்ள செங்கல் கற்றளி தொட்டால் விழும் நிலையில் உள்ளது. இந்த கோயில் 2000 ஆண்டுகள் பழமையானது என்று கிராம மக்கள் கூறுகிறார்கள். சிவன் இங்கே முதன்மை தெய்வமாக உள்ளார். வேறு எந்த தெய்வமும் இல்லை, அம்மன் பெயர் தெரியவில்லை. நந்தி கருவறைக்கு வெளியே அமர்ந்துள்ளார். கோவில் கோபுரம் பெரிய மரங்களால் சூழப்பட்டுள்ளது. கிள்ளியநல்லூர் கிராம நுழைவுச் சாலையில் கோயில் அமைந்துள்ளது. இந்த சிவன் கோயிலை யாரும் கவனித்துக்கொள்ளவில்லை, இங்கு எந்த பூஜைகளும் நடத்தப்படுவதில்லை, பராமரிப்புகளும் இல்லை.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கிள்ளியநல்லூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருச்சி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி