காடாம்புழா பகவதி தேவி திருக்கோயில், கேரளா
முகவரி
காடாம்புழா பகவதி தேவி திருக்கோயில், காடாம்புழா, மலப்புரம் மாவட்டம், கேரளா – 676553. தொலைப்பேசி எண்: +91 494-2615790
இறைவன்
இறைவி: பார்வதி / துர்க்கை
அறிமுகம்
காடாம்புழா தேவி கோயில் என்பது இந்தியாவின், கேரளத்தின், மலப்புரம் மாவட்டத்தின், காடாம்புழாவில் உள்ள புனித யாத்திரை தலமாகும். கோழிக்கோட்டையும், திருச்சூரையும் இணைக்கும் நெடுஞ்சாலையில் வெட்டிச்சிரா என்ற இடத்திற்கு 3 கி.மீ. வட்க்காக இக்கோயில் உள்ளது. இந்த கோயிலின் முக்கிய தெய்வமான பார்வதி / துர்க்கை ஆவாள். இந்த கோவிலில் தேவியின் சிலை இல்லை, இறைவி ஒரு குழியில் வணங்கப்படுகிறாள். பக்தர்கள் அம்மனுக்கு கொப்பரைத் தேங்காயை காணிக்கை செய்வார்கள். சாஸ்தா மற்றும் நாக தெய்வங்களுக்கான சிற்றாலயங்கள் உள்ளன. கோயிலுக்கு அருகில் ‘மாதம்பியர்காவு’ என்று ஒரு தனி சிவன் கோயில் உள்ளது. இந்த இரண்டு கோயில்களும் மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளன. ஆதிசங்கரர் பாடிய தலம் என்ற சிறப்பை கொண்டுள்ளது.
புராண முக்கியத்துவம்
மகாபாரதத்தில் அர்ச்சுனன் யுத்தம் செய்து நாட்டைப் பெற சிவனை வணங்கி தியானம் செய்து வரம் பெற்று பாசுபதாஸ்திரத்தை பெற அர்ச்சுனன் தவம் செய்தான். தவத்தில் மகிழ்ந்த சிவனும் பார்வதியும் அர்ச்சுனனின் அகங்காரத்தைப் போக்கி அருள்தர நினைத்தனர். இதற்காக சிவன் காட்டு வேடுவனாகவும் பார்வதி தேவி வேடவப் பெண்ணாகவும் தோன்றினர். அதே சமயம் துரியோதனனால் ஏவப்பட்ட முகாசுரன் பன்றி உருவில் தோன்றி அர்ச்சுனனின் தவத்தை கலைக்க முற்பட்டான். இதை உணர்ந்த வேடவராக வந்த சிவன் அம்பு எய்தி பன்றியைக் கொன்றார். அப்பொழுது தபஸில் உணர்ந்த கலைந்த அர்ச்சுனனும் அம்பு எய்தினான். இதனால் வேடவராக வந்த சிவனுக்கும், அர்ச்சுனனுக்கும் சண்டை நடந்தது. இதைக் கண்ட வேடவப் பெண்ணாக வந்த பார்வதி தேவி அர்ச்சுனனைத் தடுத்து உன் அம்புகள் யாவும் என் தெய்வத்தின் மேல் (ஈஸ்வரன் மேல்) மலர்களாக பொழியட்டும் என்றாள். அர்ச்சுனன் எய்த அம்புகள் அனைத்தும் மலர்களாக மாறியதால் அர்ச்சுனன் அங்கே தோற்றுப்போய் மயங்கி விழுந்தான். பின் கண்விழித்த அர்ச்சுனன். தன் முன்னே சிவனும், பார்வதியும் நிற்பதைக் கண்டு வேட உருவில் வந்தது சிவனே என உணர்ந்து சிவன் பாதத்தில் விழுந்து நமஸ்கரித்து மன்னிப்புக் கேட்டான். மனமகிழ்ந்து சிவனும் பார்வதியும் அர்ச்சுனனுக்கு பாசுபதாஸ்திரம் தந்து மகிழ்ந்தனர். இந்த நிகழ்ச்சியில் தோன்றிய வேடவப் பெண் ஸ்ரீபார்வதி தேவி தற்போது கோவில் கொண்டுள்ள காடாம்புழா ஸ்ரீபகவதியே ஆகும். ஸ்ரீஆதிசங்கரர் சர்வஞ்ஞபீட மேறி தீர்த்தாடனம் செய்தபோது கோயிலின் மேற்கு பாகம் வழியாக யாத்திரை சென்றார். அப்போது அங்கு ஒரு தெய்வீக ஒளிதோன்ற, ஆதிசங்கரர் அதன் அருகில் செல்ல முயன்றார். ஆனால் அந்த ஒளி ஒரு துவாரத்தில் ஊடுருவி மறைந்தது. உடனே ஸ்ரீஆதிசங்கரர் தியானத்தில் ஆழ்ந்து கிராத பார்வதி தேவி மாத்ரு பாவத்தில் இருப்பதைக் கண்டார். உடனே சுவாமிகள் பூஜைக்கான சாமான்கள் கொண்டு வரச்செய்து அந்த இடத்தில் அம்பாளை ஆவாகனம் செய்தார். கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரத்தன்று இந்த நிகழ்ச்சி நடந்தது. இந்த கோயிலின் பூஜை செய்யும் முறையை ஸ்ரீஆதிசங்கரர் கொண்டு வந்தார். ஒரு துவாரத்தில் ஒளி நுழைந்தால் அந்த துவாரம் தான் சைதன்ய ஸ்தானமாய் விளங்குகிறது. அந்த துவாரத்தை அடைத்து அதன் மேல் பூ மூடல் பூஜை செய்தார் ஸ்ரீஆதிசங்கரர். கருவறையை 4 அடி நீளமும் 3 அடி அகலமும் உடைய கருங்கல்லால் உருவாக்கி இருக்கிறார்கள். இதன் நடுவில் தான் அம்பாள் தோன்றிய துவாரம் உள்ளது. இந்த துவாரம் 5 அங்குல சுற்றளவு கொண்டது. இந்த இடத்தில் ஸ்ரீபகவதி தேவி குடிகொண்டு பக்தர்களை ஆசிர்வதிக்கிறார்கள்.
நம்பிக்கைகள்
இங்கு வரும் பக்தர்கள் முக்கிய பிரார்த்தனையாக தேக முட்டு, கர்ம முட்டு, பூமி முட்டு, கிரக முட்டு, வித்யா முட்டு, மாங்கல்ய முட்டு, சந்தான முட்டு, சத்ரு முட்டு, வாகன முட்டு என்ற பல சங்கடங்களும் தீர்ந்து போக வேண்டி பிரார்த்தித்து முட்டறுக்கல் வழிபாடு செய்கின்றார்கள். முட்டறுக்கல் என்பது மனிதனுக்கு வந்து சேரும் கஷ்டம், தடங்கல், வியாதி, சூன்யப்பிணிகள் போன்றவற்றை நீக்குவதாகும். இதற்கு இரண்டு ரூபாய் கொடுத்து வாங்கிய ஒரு ரசீதும் ஒரு தேங்காயுமாக அர்ச்சகரிடம் கொடுத்து நட்சத்திரம், பெயர், என்ன காரியத்திற்காக இந்த வேண்டுதல் என்ற விவரங்களை சொன்னால், அர்ச்சகர் நமக்காக அதை ஸ்ரீபகவதியின் முன்நின்று உடைப்பார். தேங்காய் உடையும் நிலையை வைத்து காரியம் நடக்குமா, தோஷம் தீர்ந்ததா, பயம் ஏதும் உண்டா என்பதை அம்பாள் முன் அர்ச்சகர் நமக்கு சொல்வார். இரண்டு மூடிகளும் பக்தர்களுக்கே பிரசாதமாக திருப்பி கொடுத்து விடுவார்கள். தினசரி 7000 முதல் 20000 வரை முட்டறுக்கள் (தேங்காய் உடைத்தல்) இங்கு நடக்கின்றது.
சிறப்பு அம்சங்கள்

திருவிழாக்கள்
இங்கு பூ மூடல், முட்டறுக்கல் (தேங்காய் உடைத்தல்) திரிகால பூஜை இவை நடைபெறும். இவற்றில் இங்கு பூ மூடல் மிகவும் பிரசித்தம்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
நிர்வகிக்கப்படுகிறது
மலபார் தேவஸ்வம் வாரியத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
காடாம்புழா
அருகிலுள்ள இரயில் நிலையம்
குட்டிப்புரம்
அருகிலுள்ள விமான நிலையம்
கோழிக்கோடு