காடனேரி கொழுந்தீஸ்வரர் திருக்கோயில், விருதுநகர்
முகவரி :
அருள்மிகு கொழுந்தீஸ்வரர் திருக்கோயில்,
குன்னூர்,
விருதுநகர் மாவட்டம் – 626149.
போன்: +91 98432 77377
இறைவன்:
கொழுந்தீஸ்வரர்
இறைவி:
மரகதவள்ளி
அறிமுகம்:
மதுரை தென்காசி சாலையில் விருதுநகர் மாவட்டத்தில், கிருஷ்ணன் கோவில் என்ற இடத்தில் ஆயர்தர்மம் செல்லும் பெருந்தில் பயணித்து மொட்டைமலை பேருந்து நிறுத்தத்தில் இறங்கி மலைகொழுந்தீஸ்வரர் கோயிலை அடையலாம். பயண துராம் 10கி.மீ. விருதுநகர்-காடனேரி நேரடி பேருந்து வசதி உள்ளது. பயண தூரம் 30கி.மீ காடனேரியில் இறங்கி சுமார் ஒரு கி.மீ தூரம் சென்று மொட்டை மலை அடிவாரத்தை அடையலாம்.
புராண முக்கியத்துவம் :
விருதுநகர் மாவட்டத்தின் எண்ணற்ற கோயில்கள் இருப்பினும், கி.பி. எட்டாம் நூற்றாண்டில் பாறைகளை குடைந்து அமைக்கப்பட்ட முதல் குடவறை சிவன் கோயில் இங்கு அமைந்துள்ளது சிறப்பு வாய்ந்தது. விருதுநகர் மாவட்டம் மூவரை வென்றான் அருகே குன்னூர் மலைப்பாறையில் அமைந்துள்ள மரகதவள்ளி அம்பாள் சமேத மலைக்கொழுந்தீஸ்வரர் கோயில் சிவ தலங்களில் பிரசித்தி பெற்றது.
நம்பிக்கைகள்:
நோய்கள் தீர மரகதவள்ளி அம்பாள் சமேத மலைக்கொழுந்தீஸ்வரரை வழிபடுகின்றனர் பக்தர்கள். மூலவருக்கு அபிஷேகம் செய்து புது வஸ்திரம் சாற்றி அர்ச்சனை செய்கின்றனர்
சிறப்பு அம்சங்கள்:
அர்ச்சுனன் சுனை தீர்த்தம்: மகாபாரதப் போரில் அர்ச்சுனன் எய்த அம்புகளில் ஒன்று, கோயில் அமைந்துள்ள பாறையில் விழுந்ததாக ஐதீகம். இதன் காரணமாக அம்பு குத்திய இடத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. பின் அதுவே வற்றாத சுனை நீரூற்றாக அர்ச்சுனன் சுனை தீர்த்தமாக உள்ளது. இத்தீர்த்தம் அடிவாரத்தில் அர்ச்சுனன் நதியாக இன்றளவும் ஓடுகிறது. அர்ச்சுனன் சுனை அருகே திருவோட்டுக்கேணி வற்றாத நீரூற்று உள்ளது. அர்ச்சுனன் சுனை தீர்த்தம், திருவோட்டுக்கேணி தீர்த்தம், நோய்களை தீர்க்கும் அருமருந்தாக இருப்பதாக நம்பிக்கை நிலவுகிறது.
பாறையை குடைந்து கருவறையில் லிங்கத்துடன் குடவறை கோயில் அமைத்துள்ளனர். பக்கவாட்டின் வலதுபுறம் நடராஜர் – சிவகாமி அம்பாள், இடப்புறம் விநாயகர், முருகன் சிலைகள் பாறையில் தத்ரூபமாக அமைக்கப்பட்டுள்ளது. குடவறை கோயில் வெளியில் வலப்பக்கம் சிவகாமி அம்பாள், காலபைரவர், நவக்கிரகங்களுக்கு தனித்தனி கோயில்கள் உள்ளன. கோயில் அருகே குமரகுருபர சுவாமிகளின் ஜீவசமாதியான இடத்தில் சிவன் கோயில் எழுப்பப்பட்டுள்ளது. காலபைரவர் கோயில் அருகே குடவறை கோயில் உருவானது குறித்து தமிழில் உள்ள கல்வெட்டுகள் சிதிலமடைந்து காணப்படுகிறது. இதனால் கோயிலை வடிவமைத்த பின்னணியை தொல்லியல் துறையினரால் காண இயலவில்லை. இந்து அறநிலைய ஆட்சித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலுக்கு 2008ல் கும்பாபிஷேகம் நடந்தது.
திருவிழாக்கள்:
சிவராத்திரி, பிரதோஷம், பவுர்ணமி நாட்களில் சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்கார, அபிஷேகங்கள் நடக்கின்றன.
காலம்
கி.பி. 8 ஆம் நூற்றாண்டு
நிர்வகிக்கப்படுகிறது
இந்து சமய அறநிலையத்துறை
அருகிலுள்ள பேருந்து நிலையம்
மொட்டைமலை
அருகிலுள்ள இரயில் நிலையம்
விருதுநகர்
அருகிலுள்ள விமான நிலையம்
மதுரை