கருங்குழி ஸ்ரீ ஞானகிரீஸ்வரர் திருக்கோயில், செங்கல்பட்டு
முகவரி
கருங்குழி ஸ்ரீ ஞானகிரீஸ்வரர் திருக்கோயில், (பரிகார தலம்) கருங்குழி, செங்கல்பட்டு மாவட்டம்- 603303.
இறைவன்
இறைவன்: ஸ்ரீ ஞானகிரீஸ்வரர் இறைவி : ஸ்ரீ ஞானாம்பிகை
அறிமுகம்
சென்னை-திருச்சி நெடுஞ்சாலையில் செங்கல்பட்டு மதுராந்தகம் இடையில் உள்ள கருங்குழி கிராமம். ஸ்ரீ ராமபிரான், ராவணன் வதம் முடித்து வரும்போது ஸ்ரீ விபந்த முனிவருக்கு கொடுத்த வாக்கினை நினைவு படுத்த வேண்டி, ஸ்ரீ பரமேஸ்வரன் ஞான கிரி மலையாக உருவெடுத்து அவரை தடுத்தாட் கொண்டதாக வரலாறு உள்ளது. முழுவதும் கற்கோயிலாக விளங்கும் இத்தலத்தில் பல சித்தர்கள், முனிவர்கள் , ஸ்ரீ அருணகிரிநாதர், ஸ்ரீ ராமலிங்க வள்ளலார் ஆகிய மஹான்கள் வழிபட்டுள்ளனர். இங்குள்ள ஸ்ரீ நடராஜர் சிலையும் ஸ்ரீ சிவகாமி அம்மை சிலையும் அஷ்ட கஜங்கள், அஷ்ட நாகங்களால் தாங்கப்படுகின்றன. இத்தல தீர்த்தம் பஸ்ம தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. பஞ்சகிரி தலங்களில் ஒன்றாக இத்தலம் விளங்குகிறது.
நம்பிக்கைகள்
பரிகார தலம்: எல்லா வித நோய்களுக்கும் நிவாரணம் அளிக்கும் தலமாக போற்றப்படுகிறது. கல்வியில் நன்கு சிறந்து விளங்கிட இங்குள்ள இறைவனை வழிபட்டால் பயன் பெறுவர்.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கருங்குழி
அருகிலுள்ள இரயில் நிலையம்
மதுராந்தகம்
அருகிலுள்ள விமான நிலையம்
சென்னை