Saturday Nov 23, 2024

கரந்தை கருணாசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

கரந்தை கருணாசுவாமி திருக்கோயில், கரந்தை, கரந்தட்டாங்குடி தஞ்சாவூர் மாவட்டம் – 613002

இறைவன்

இறைவன்: வசிஷ்டேஸ்வரர், கருணாசாமி, கருவேலநாதசுவாமி இறைவி: பெரியநாயகி, திரிபுரசுந்தரி

அறிமுகம்

தஞ்சாவூர் வசிஷ்டேஸ்வரர் கோயில் தமிழ்நாட்டின் தஞ்சாவூரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இந்தக் கோயில் தஞ்சாவூர்-கும்பகோணம் சாலையில் தஞ்சாவூரிலிருந்து 3 கிமீ தொலைவில் கருந்தட்டாங்குடியில் அமைந்துள்ளது. வைப்புத்தலமான இத்தலம் சுந்தரர் பாடியதாகும். தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானத்திற்கு உட்பட்ட 88 கோயில்களில் இக்கோயிலும் ஒன்றாகும். இக்கோயிலில் உள்ள இறைவன் வசிஷ்டேஸ்வரர், கருணாசாமி, கருவேலநாதசுவாமி என்றழைக்கப்படுகிறார். இறைவி பெரியநாயகி, திரிபுரசுந்தரி என்றழைக்கப்படுகிறார்.

புராண முக்கியத்துவம்

கிழக்கு நோக்கி கோயில் அமைந்துள்ளது.கிழக்கு வாயிலை ஒட்டி அமிர்த புஷ்கரணி என்றும் சூரிய புஷ்கரணி என்றும் அழைக்கப்படுகின்ற குளம் காணப்படுகிறது. மூலவர் சன்னதி கிழக்கு நோக்கிய நிலையில் உள்ளது. இவ்வாயிலின் வழியாக உள்ளே வந்தால் முதலில் கொடி மரமும் பலிபீடமும் காணப்படுகின்றன. அடுத்துள்ள மண்டபத்தில் வலது புறம் நர்த்தன கணபதி, முருகன், விநாயகர் ஆகியோரும், இடது புறம் சனீஸ்வரர், சூரியன், பைரவர் ஆகியோரும் உள்ளனர். மூலவர் சன்னதிக்கு முன்பாக வெளியில் வலது புறம் விநாயகரும், இடது புறம் முருகனும் உள்ளனர். இரு புறமும் துவார பாலகர்கள் உள்ளனர். கருவறைக்கு முன்னுள்ள மண்டபத்தில் நந்தியும் பலிபீடமும் உள்ளன. மூலவர் கருவறை கோஷ்டத்தில் ஞானசம்பந்தர், ஆடலரசர், அப்பர், கங்காளர், ரிஷிபத்தினி, விநாயகர், தட்சிணாமூர்த்தி, வசிஷ்டர் எனப்படும் அகஸ்தியர், அர்த்தநாரீஸ்வரர், லிங்கோத்பவர், கங்காளதேவர், கங்காதரர், பிரம்மா, வீணாதரர், காலசம்காரர், பிட்சாடனர், துர்க்கை ஆகியோர் உள்ளனர். அருகே துர்க்கையம்மன் சன்னதி உள்ளது. வடமேற்கே தல மரமான வன்னி மரம் உள்ளது. மரத்தின் முன்பாக பைரவரையும் நாகத்தையும் காணலாம். திருச்சுற்றில் வள்ளி தெய்வானையுடன் கூடிய முருகன், ஏழு லிங்கங்கள், தொடர்ந்து ஜுரகரேஸ்வரரைக் குறிக்கும் லிங்கம், கஜலட்சுமி ஆகியோருக்கு தனித்தனியாக சன்னதிகள் உள்ளன. வெளிச்சுற்றில் நான்கு புறமும் விநாயகர் சன்னதிகள் உள்ளன. மேற்கே வாயிலில் பாலதண்டாயுதபாணி சன்னதி உள்ளது. மூலவர் சன்னதியின் இடது புறமாக உள்ள அம்மன் சன்னதி தெற்கு நோக்கிய நிலையில் உள்ளது.சன்னதியின் முன்புறம் இருபுறமும் துவாரபாலகிகள் உள்ளனர். கோயிலின் வெளிச்சுற்றில் நான்கு பக்கங்களிலும் வாயில்கள் காணப்பட்டபோதிலும் இந்தத் தென்புற கோயில் வாயில் மட்டுமே பயன்பாட்டில் உள்ளது. இந்த கோபுரத்தின் முன்பாக நந்தி மண்டபம் கோயிலின் வெளியே உள்ளது.

காலம்

7 ஆம் நூற்றாண்டு

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கரந்தை

அருகிலுள்ள இரயில் நிலையம்

தஞ்சாவூர்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top