கண்டியூர் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
கண்டியூர் ஏகாம்பரேஸ்வரர் திருக்கோயில்,
கண்டியூர், வலங்கைமான் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 613202.
இறைவன்:
ஏகாம்பரேஸ்வரர்
இறைவி:
காமாட்சி
அறிமுகம்:
கோயில்கள் அதிகம் கொண்ட மாவட்டங்களில் திருவாரூரும் ஒன்று. இங்கு வலங்கைமான் வட்டத்தில் கண்டியூர் எனும் ஊரில் (திருவையாறு கண்டியூர் அல்ல; இது வேறு தலம்) எழுந்தருளி இருக்கிறார் காமாட்சி அம்மன் உடனுறை ஏகாம்பரேஸ்வரர். திருஞானசம்பந்தப் பெருமானால் பூஜிக்கப்பட்ட இந்த ஏகாம்பரேஸ்வரர், ஞானமும் முக்தியும் தரவல்ல பெருமான். அம்பிகை காமாட்சி, திருமண வரம் அருளும் தேவியாகவும் பிள்ளை வரம் அருளும் தாயாகவும் விளங்கி வருகிறாள்.
`காலமறிய முடியாத காலத்தில் எழுப்பப்பட்ட இந்தக் கோயில், மிகுந்த இடிபாடுகளுடன் சிதிலமுற்றுப்போனது. உள்ளூர் அடியார் பெருமக்கள் இணைந்து வேறோர் இடத்தில் பெரியளவில் ஆலயம் எழுப்பத் தொடங்கினர். அம்பிகை மற்றும் பரிவார தேவதைகளின் சந்நிதிகள் என ஆலயப் பணிகள் மெள்ள தொடங்கின. ஆனால் பெருந்தொற்று பாதிப்பு காரணமாக கோயில் பணிகள் முடங்கிப்போய்விட்டன. இப்போது மீண்டும் திருப்பணியைத் தொடங்கவேண்டும். அடியார்கள், சிவபக்தர்கள் அனைவரும் ஒருங்கிணைந்தால்தான் இந்த ஆலயத்தின் திருப்பணிகள் விரைவுபெறும்.
கண்டியூரில் `அகத்தியக் காவிரி’ எனப்படும் வெட்டாற்றின் கரையில் அமைந்துள்ளது இவரது ஆலயம். மிக அற்புதமான திருப்பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருந்தன. அற்புதமான லிங்கத் திருமேனியராய் காட்சி தருகிறார் ஈசன். முற்கால சோழ மன்னர்கள் பலரும் பணிந்து போற்றிய பெருமானாம் இவர்.
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கண்டியூர்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி