Thursday Dec 26, 2024

கட்டவாக்கம் விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் திருக்கோயில், காஞ்சிபுரம்

முகவரி :

விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் திருக்கோயில்,

கட்டவாக்கம்,

காஞ்சிபுரம் மாவட்டம் – 631605.

தொலைபேசி: +91 – 44 – 27290805

மொபைல்: +91 – 99529 55500 / 9444225091

இறைவன்:

லட்சுமி நரசிம்மர்

அறிமுகம்:

 காஞ்சீபுரம் மாவட்டம் தென்னேரி அருகில் கட்டவாக்கத்தில் ஸ்ரீ விஸ்வரூப லட்சுமி நரசிம்மர் கோவில் அமைந்துள்ளது. இங்கு ஆதார பீடம், கூர்ம பீடம், பத்ம பீடம், அநந்த பீடம், யோக பீடம் ஆகிய ஐந்து பீடங்களின் மேல் கம்பீரமாக வீற்றிருக்கும் பெருமாளுக்கு மேல் இரண்டு கரங்களில் சக்கரமும், வில், அம்பும் தாங்கி மற்றும் அபய வரத அஸ்தத்துடன் குளிர காட்சிக்கும் பாணியானது வந்தாரை வாழ வைக்கும் பெருமாள் என்பதை உறுதிப்படுத்துகிறது.

புராண முக்கியத்துவம் :

மகாலட்சுமியுடன் கூடிய இந்த நரசிம்மருக்கு த்ரிநேத்ரம் அமைந்துள்ளது “அருள்விழியால் நோக்கி கருணை மழை பொழிய இரு கண்ணும் போதாமல் முக்கண்ணனாக சேவை சாதிக்கிறார்” மடியில் வீற்றிருக்கும் தாயார் தாமரை தாங்கிய அபய அஸ்தத்துடன் மிகவும் சாந்தமான தோற்றத்துடன் எழுந்தருளியிருப்பதை காணலாம். இங்கு எழுந்தருளி இருக்கும் நரசிம்மனுக்கு வஸ்ரதம்ஷ்ட்ரங்கள் (பற்கள்) 12 அமைந்திருக்கின்றன. இது 27 நட்சத்திரங்கள் அடங்கிய 12 ராசிகளைக் குறிக்கும். திருமுக மண்டலத்தில் இடது கண் சந்திரன், வலது கண் சூரியன், நெற்றிக்கண் செவ்வாய்,நாசி சுக்ரன், மேல் உதடு குரு, கீழ் உதடு புதன், வலது காதில் கேது, இடது காதில் ராகு, நாக்கில் சனி பகவான் ஆக நவக்கிரகங்களும் பெருமானுடைய திருமுக மண்டலத்தில் ஐக்கியமாகி இருப்பதால் இது ஒரு பரிகார தலமாக விளங்குகிறது.

சிறப்பு அம்சங்கள்:

பெருமாளின் அமைப்பு ஆறு அவதாரங்களையும், தாங்கி இருக்கும் ஆயுதங்கள் 4 அவதாரங்களையும் நினைவுபடுத்தும். கூர்ம பீடம் கூர்மாவதாரத்தையும், வஜ்ரதம்ஷ்ட்ரம வராக அவதாரத்தையும், வில் அம்பு (பார்கவ அஸ்திரம்) பரசுராம், ராம அவதாரங்களையும், சக்கரமானது கிருஷ்ண அவதாரத்தையும் நினைவுபடுத்துகிறது. மேலும் தாங்கியுள்ள ஆயுதங்களும் ஜய விஜயர்களுக்கு ஏற்பட்ட சாபத்தினால் அவர்களை வதம் பண்ண பெருமாள் 3 பிறவிகளில் உபயோகித்த ஆயுதங்கள் ஆகியவற்றையும் இந்த நரசிம்மனே தாங்கியிருப்பது விசேஷ அம்சம்.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத்துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

கட்டவாக்கம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

வாலாஜாபாத், காஞ்சிபுரம்

அருகிலுள்ள விமான நிலையம்

சென்னை

Location on Map

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top