கட்டநகரம் விஸ்வநாதர் சிவன்கோயில், தஞ்சாவூர்
![](https://lightup-temples.s3.ap-south-1.amazonaws.com/wp-content/uploads/294204413_7756563817749994_5754898961470345120_n.jpg)
முகவரி :
கட்டநகரம் விஸ்வநாதர் சிவன்கோயில்,
கட்டநகரம், திருவிடைமருதூர் வட்டம்,
தஞ்சாவூர் மாவட்டம் – 612504.
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
திருப்பனந்தாளில் இருந்து ஆடுதுறை செல்லும் சாலையில் 2½ கிமீ தூரம் சென்றதும் வலதுபுறம் சிறிய சாலை கட்டநகரம் அழைத்து செல்லும். இங்கு ஊரின் முகப்பிலேயே கிழக்கு நோக்கிய ஒரு சிவன்கோயில் உள்ளது. இறைவன் விஸ்வநாதர் இறைவி விசாலாட்சி. இறைவன் கிழக்கு நோக்கிய கருவறை கொண்டுள்ளார். கருவறை ஒட்டி முகப்பு மண்டபம் உள்ளது. அதன் மேல் ரிஷப சுதைகளும் இறைவன் இறைவி அமர்ந்திருக்கும் சுதைகளும் உள்ளன. இறைவன் நடுத்தர அளவுடைய லிங்க மூர்த்தியாக உள்ளார். இறைவனின் வலதுபுறம் விநாயகருக்கு தனி கோயில் அமைந்துள்ளது, இறைவி தெற்கு நோக்கி தனி கருவறை கொண்டுள்ளார் மூன்று கருவறைகளும் தனி தனியே அமைந்துள்ளன. காசிக்கு சென்று திரும்பிய பெரியவர்களால் கட்டப்பட்ட கோயிலாக இருக்கலாம். போதிய பராமரிப்பின்றி உள்ளது, குடமுழுக்கு நடந்து பல வருடங்கள் ஆகிறது என பார்த்தவுடன் புரிகிறது.
#”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/294204413_7756563817749994_5754898961470345120_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/294937893_7756563431083366_5002371157681925618_n-1024x771.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/295131897_7756563417750034_3662489661980758646_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/295340165_7756563361083373_8280726936650536213_n-771x1024.jpg)
![](https://52.66.9.118/wp-content/uploads/2022/11/296247788_7756563321083377_3513987899603123525_n-771x1024.jpg)
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கட்டநகரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
தஞ்சாவூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி