கடம்பரவாழ்க்கை விஸ்வநாதர் சிவன்கோயில், நாகப்பட்டினம்
முகவரி :
கடம்பரவாழ்க்கை விஸ்வநாதர் சிவன்கோயில்,
கடம்பரவாழ்க்கை, கீழ்வேளுர் வட்டம்,
நாகப்பட்டினம் மாவட்டம்
இறைவன்:
விஸ்வநாதர்
இறைவி:
விசாலாட்சி
அறிமுகம்:
நாகப்பட்டினம் – கீழ்வேளூர் சாலையில் உள்ள ஆழியூரிலிருந்து வடக்கு நோக்கி செல்லும் பாதையில் 2 கி.மீ தூரமும், நாகூரிலிருந்து ஆழியூர் செல்லும் பாதையில் சிரங்குடிபுலியூர் அருகில் 1 கி.மீ. தூரத்திலும் உள்ளது. முருகன் வணங்கிய பஞ்ச கடம்பத்தலங்களில் இதுவும் ஒன்று. பழம் கோயில் புதுப்பிக்கப்பட்டு தற்போது குடமுழுக்கு கண்டுள்ளது. இறைவன்- விஸ்வநாதர், இறைவி – விசாலாட்சி சுவாமி கிழக்கு பார்த்தும், அம்பாள் தெற்கு பார்த்தும் இருக்கும் ஆலயம். இரு கருவறையும் ஒரு மண்டபத்தால் இணைக்கப்பட்டுள்ளது. இறைவன் சிறிய அளவிலான லிங்க மூர்த்தி, கருவறை வாயிலில் விநாயகர் மற்றும் தனி முருகன் உள்ளனர். நேர் எதில் ஒரு சிறிய நந்தி பலிபீடம் உள்ளது.அதன் பின்புறம் கிழக்கு நோக்கிய கொடிமர விநாயகர் உள்ளார். முகப்பு மண்டப வாயிலில் ஒரு சிறிய விநாயகர் சுவரில் ஒரு மாடத்தில் உள்ளார்.
கருவறை சுற்று மாடங்களில் தென்முகன் ஓர் அழகான மாடத்தில் உள்ளார். வடமேற்கில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜபெருமாள் எதிரில் கருடாழ்வார், தெற்கு நோக்கி ஆஞ்சனேயர் இணைந்த தனி கோயில் அமைப்பு உள்ளது. வடகிழக்கில் கால பைரவர் பைரவர் சந்திரன் சன்னதிகளும் சிறிய அளவில் நவக்கிரக மண்டபமும் உள்ளது. தென்கிழக்கு பகுதியில் சூரியன் உள்ளார். அர்ச்சகர் வெளியூரிலிலிருந்து வருகிறார். அவருக்கு மாதாந்திர சம்பளம் கொடுப்போர் பட்டியல் ஒன்று வெளியில் உள்ளது. சிவன்கோயிலை ஊர்மக்களே தங்களால் முடிந்த அளவிற்கு பராமரித்து வருவது பாராட்ட தக்கது.
”உயர்திரு கடம்பூர் விஜய் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”
காலம்
1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
கடம்பரவாழ்க்கை
அருகிலுள்ள இரயில் நிலையம்
நாகப்பட்டினம்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி