Saturday Nov 23, 2024

ஏரகரம் கந்தநாதசுவாமி திருக்கோயில், தஞ்சாவூர்

முகவரி

ஏரகரம் கந்தநாதசுவாமி திருக்கோயில், ஏரகரம் அஞ்சல் கும்பகோணம் வட்டம் தஞ்சாவூர் மாவட்டம் – 612303

இறைவன்

இறைவன்: கந்தநாதசுவாமி இறைவி: சங்கர நாயகி

அறிமுகம்

ஏரகரம் கந்தநாதசுவாமி கோயில் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்திலிருந்து 8 கிமீ தொலைவில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும். இருப்பினும் முருகன் கோயில் என்றே உள்ளூரில் அழைக்கின்றனர். ஏரகம், திருவேரகம் என்றும் அழைக்கப்படுகிறது. இத்தலம் அப்பர் திருவாக்கில் இடம்பெற்றுள்ள சோழ நாட்டு வைப்புத்தலமாகும். கும்பகோணத்திலிருந்து சுவாமிமலை செல்லும் பாதையில் மூப்பக்கோயிலிலிருந்து பிரியும் சாலையில், ஆசூர் வாய்க்காலுக்கு மேற்புறம் இக்கோயில் உள்ளது. தேவாரப் பாடல் பெற்ற தலமான இன்னம்பரில் இருந்து திருப்புறம்பியம் செல்லும் சாலை வழியில் வலதுபுறம் ஏரகரம் செல்லும் சாலை பிரிகிறது. அவ்வழியாகச் சென்றும் ஏரகரம் அடையலாம். கச்சியப்ப சிவாசாரியார், நக்கீரர், அருணகிரிநாதர் ஆகியோர் இக்கோயிலில் உள்ள முருகனைப் பாடியுள்ளனர்.

புராண முக்கியத்துவம்

ஆதிகந்தநாதசுவாமி கோயில் என்றழைக்கப்படுகிறது. கருவறையில் லிங்கத்திருமேனி உள்ளது. கோயில் வளாகத்தில் சங்கரநாயகி அம்மன் சன்னதி உள்ளது. தொடர்ந்து விநாயகர், சிவலிங்கம், மகாலிங்கம், சூரியன், பைரவர், நாககன்னியர் உள்ளனர். மூலவர் கருவறை கோஷ்டத்தில் நர்த்தன விநாயகர், தட்சிணாமூர்த்தி, லிங்கோத்பவர், பிரம்மா உள்ளனர். திருச்சுற்றில் சண்டிகேஸ்வரர் சன்னதியும், நவக்கிரக சன்னதியும் உள்ளன. மூலவர் சன்னதிக்குப் பின்புறம் ஆதிகந்தநாதசுவாமி சன்னதி உள்ளது. இச்சன்னதியில் சுப்பிரமணியர் நின்ற நிலையில் ராஜகோலத்தில் உள்ளார். அசுரர்களால் முனிவர்களின் தவத்திற்கு இடையூறு ஏற்பட்டபோது சிவபெருமானை வேண்டினர். அப்போது சிவன் கந்தனை அழைத்து முனிவர்களைக் காத்திடும்படிக் கூறியதோடு ஒரு அஸ்திரத்தையும் வழங்கி அதனை செலுத்தும் இடத்தை அவருடைய அகமாக அமைத்துக்கொள்ளும்படி அருளியுள்ளார். முருகனின் அஸ்திரம் பூமியில் பாய்ந்த இடம் ஏரகம் என்கின்றனர். 12 செப்டம்பர் 1982 மற்றும் 19 மார்ச் 2015இல் குடமுழுக்கு ஆனதற்கான கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

காலம்

1000 ஆண்டுகள் பழமையானது

நிர்வகிக்கப்படுகிறது

இந்து சமய அறநிலையத் துறை

அருகிலுள்ள பேருந்து நிலையம்

ஏரகரம்

அருகிலுள்ள இரயில் நிலையம்

கும்பகோணம்

அருகிலுள்ள விமான நிலையம்

திருச்சி

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top