எருமல் அகத்தீஸ்வரர் சிவன் கோயில்
![](https://lightuptemples.com/wp-content/uploads/temple/profile_image/temp-0704.jpg)
முகவரி
எருமல் அகத்தீஸ்வரர் சிவன் கோயில், சீர்காழி வட்டம், மயிலாடுதுறை மாவட்டம்.
இறைவன்
இறைவன்: அகத்தீஸ்வரர்
அறிமுகம்
வைத்தீஸ்வரன் கோயில்- மயிலாடுதுறை சாலையில் ஐந்து கிமி சென்றால் வெட்டாறு பாலம் வரும் அதன் வடக்கு கரையில் கிழக்கு நோக்கி ஐந்து கிமி சென்றால் சேமங்கலம் அதனை அடுத்து எருமல் கிராமம் உள்ளது. ஊர் அரை கிமி உள்ளடங்கி உள்ளது. இங்கு பெரிய குளத்தின் கரையில் சிறிய சிவன் கோயில் ஒன்று உள்ளது. இறைவன் அகத்தீஸ்வரர், இறைவி தெற்கு நோக்கியுள்ளார், பெயர் அறிய இயலவில்லை. அகத்தியர் வழிபட்ட லிங்கங்களில் இதுவும் ஒன்று, இறைவன் சிறிய லிங்கமாக உள்ளார். கருவறை கோட்டங்களில் சுதைகளில் செய்யப்பட்ட தென்முகன் லிங்கோத்பவர், பிரம்மன் துர்க்கை உள்ளனர். அவையும் உடைந்து பராமரிப்பின்றி உள்ளது. சண்டேசர் தனி சன்னதியில் உள்ளார். கோயில் கருவறை விமானங்களில் மரங்கள் வளர்ந்து கோயிலை பிளக்கும் முயற்சி வெற்றி பெறும் முன்னர் அவைகளை அகற்ற வருவார் எவரேனும் வருவீராகில் இன்றே அவர் பாதம் பணிகிறேன். # ”உயர்திரு கடம்பூர் கே.விஜயன் அவர்களின் அன்புகூர்ந்த அனுமதியோடு அவர்களின் பதிவுகளிலிருந்து எடுக்கப்பட்டது”.
காலம்
1000 – 2000
நிர்வகிக்கப்படுகிறது
.
அருகிலுள்ள பேருந்து நிலையம்
திருகண்ணபுரம்
அருகிலுள்ள இரயில் நிலையம்
சீர்காழி
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி