Wednesday Dec 18, 2024

எமன் வழிபட்ட நவகிரகங்கள் இல்லாத  சிவாலயங்கள்

*அகால மரணம் தரா, நவகிரகம் இல்லா சிவாலயங்கள்*

நவக்கிரகங்கள்  இல்லாத பிரசித்தி பெற்ற புராதன சிவன் கோயில்கள் 14 உள்ளன. எங்கெல்லாம் எமன் சிவனை வழிபட்டுள்ளாரோ அங்கெல்லாம் நவகிரகங்கள் இருக்காது.இந்த ஆலயங்களில் வழிபாடு அவர்களுக்கெல்லாம் அகாலமரணம் இன்றி தீர்க்காயுள் கிடைக்கும்

திருவான்மியூர் மருந்தீஸ்வரர் கோயிலில் நவகிரகம் இல்லை ஏனென்றால் அங்கு எமன் வந்து வழிபட்ட தலம்.

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயிலிலும் நவகிரக சந்நதி இல்லை. அங்கும் எமன் வந்து வழிபட்டதாக கூறப்படுகிறது.

 ஸ்ரீவாஞ்சியம் அங்கு எமனுக்கு முக்கியத்துவம். இங்கு எமன் சிவனை வழிபட்டதாக ஐதீகம்.

 நான்காவது ஸ்தலம் திருவாவடுதுறை. இங்கு எமன் சிவனை வழிபட்டதாக வரலாறுகள் உள்ளன.

 திருப்பைஞ்சீலி , வாழை மரத்தை தலவிருட்சமாகக் கொண்ட  சிவஸ்தலம். திருச்சிக்கு அருகில் உள்ள இந்த தலத்திலும் நவகிரகங்கள் கிடையாது. 

 திருக்கடையூரில் மானிடர்களின் உயிரை பறித்த எமனுக்கு சிவன் இங்கு  மறுபடியும் உயிரை எடுக்கும் அதிகாரம் வழங்கிதாக ஐதீகம் 

 காளஹஸ்தி ஆறாவது ஸ்தலம் . பஞ்சபூத தலங்களில் இது வாயு ஸ்தலம். அங்கு ஒன்பது படிகள் கொண்ட  தங்கஏணியில் (golden ladder) ஒவ்வொன்றிலும் மூன்று மலர்கள் பொறிக்கப்பட்டிருக்கும.  இந்த 3*9 என்பது 27 நட்சத்திரத்தை குறிக்கும். 27 நட்சத்திரங்களும் இந்த ஏணியில் ஆவாகனம் செய்யப்பட்டிருக்கிறது.  இந்த ஏணி சிவலிங்கத்தின்மீது சாய்த்து வைக்கப்பட்டிருக்கும். அதை தீபாராதனை காட்டும் போது மட்டும் தான் பார்க்க முடியும்.

 திருமழபாடி . திருவையாருக்கு அருகில் உள்ளது. அங்கும் நவகிரக சந்நிதி இல்லை.

 திருக்கடையூர் . இதன் தலபுராணம்  வித்தியாசமானது. எமன் மார்க்கண்டேயனை நோக்கி பாசக்கயிறு வீசும் போது சிவன் காட்சி அளித்து என்னுடைய பக்தனை எப்படி நீ ஆட்கொள்ளலாம் என்று காலால் எட்டி உதைத்ததாகவும் அதனால் இறத்தல் தொழில் நிறுத்தி வைக்கப்பட்டதாகவும் இந்த ஸ்தல புராணம் கூறுகிறது.

ஒன்பதாவது ஸ்தலம் திருமழபாடி திருவையாறு அருகில் இருக்கிறது.

பின் பத்தாவது ஸ்தலம் திருவெங்காடு. இங்கிருக்கும் நடராஜர் சிதம்பரத்தை விட பழமையானவர்.

அடுத்து திருப்புரம்பியம் பதினோராவது ஸ்தலம். இங்கும் நவக்கிரகம் கிடையாது.

இதைத்தவிர இன்னும் நவகிரகங்கள் இல்லாத புகழ்பெற்ற பல சிவ ஆலயங்கள் உள்ளன.

எமன் வழிபட்ட இந்த சிவாலயங்களில் சென்று ஈசன் சிவபெருமானே  வழிபடுபவர்களுக்கு எல்லாம் ஆயுள் தீர்காயுள் என்பது ஐதீகம். அகால மரணம் என்பது ஏற்படாது.

ஓம் நமசிவாய

Share....
LightupTemple lightup

lightuptemple

மறுமொழி இடவும்

Your email address will not be published.

Back to Top