ஊட்டியாணி நாகநாதர் திருக்கோயில், திருவாரூர்
முகவரி :
ஊட்டியாணி நாகநாதர் திருக்கோயில்,
ஊட்டியாணி, நீடாமங்கலம் வட்டம்,
திருவாரூர் மாவட்டம் – 610206.
இறைவன்:
நாகநாதர்
அறிமுகம்:
ஊட்டியாணி என்பதன் பொருள் என்ன?? முதன் முதலில் சிவன் உயிர்களுக்காக உணவுதரும் நெற்பயிர் வளர்த்து உலகத்தோர்க்கு உவந்து அளித்த இடம் என்பதால் இப்பகுதிக்கு ஊட்டியாணி எனப்பெயர் வந்துள்ளது. ஊட்டு+ஆனை என்பதே ஊட்டியாணி. ஊட்டு என்றால் உணவளித்தல் என பொருள், ஆனை என்பது ஐராவதம், ஐராவதம் வழிபட்டதால் இப்பெயர். இவ்வூரில் இரு சிவன் கோயில்கள் உள்ளன. முதல் கோயில் ஐராவதேஸ்வரர். இரண்டாவதான இக்கோயில் ஆகமக்கோயில். தேரையார் சித்தர் வழிபாடு செய்த இடம் எனப்படுகிறது. இங்கு சித்தர் கோயில், நாக பராசக்தி அம்மன், கோட்டை கருப்பண்ண சாமி என கதம்ப மாலை போல சன்னதிகள் அமைந்துள்ளன. பூசாரிகள் கொண்டு பூஜை செய்யப்படுகிறது, குறிசொல்லுதல் யாகம் வளர்த்தல் என பல வகை. நடுவில் சிறிய கிழக்கு நோக்கிய திருக்கோயிலாக கருவறையில் இறைவன் இறைவி அமர்ந்திருக்கும் கோலத்தில் சிலைகள் உள்ளன, கீழே சிறிய சிவலிங்கம் கருவறை சுற்றில் தென்முகன், விநாயகர் முருகன் லட்சுமி என சன்னதிகள் உள்ளன.
காலம்
500-1000 ஆண்டுகள் பழமையானது
அருகிலுள்ள பேருந்து நிலையம்
ஊட்டியாணி
அருகிலுள்ள இரயில் நிலையம்
திருவாரூர்
அருகிலுள்ள விமான நிலையம்
திருச்சி